‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா – ரசிகர்கள் காட்டம்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா - ரசிகர்கள் காட்டம்!
'பிக் பாஸ்' அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா - ரசிகர்கள் காட்டம்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் தாடி பாலாஜியின் மனைவி நித்யா – ரசிகர்கள் காட்டம்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜி அவரது மகளை விட்டு பிரிந்திருப்பது போல் பேசியுள்ளார். இதனை பார்த்த பிறகு அவரது மனைவி நித்யா லைவ் வந்து ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

தாடி பாலாஜி:

பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டவர்கள் தான் தாடி பாலாஜி, நித்யா. இவர்கள் இருவரும் கணவன், மனைவி. தாடி பாலாஜி பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் பல வருடங்களாக வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் சில வருடங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர்கள் வந்து சண்டையிட்டு வந்தனர்.

கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் ஹேமா & சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!

கமல் தலையிட்டும் கூட இவர்களின் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தற்போது தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்திலிருந்து தன் கருத்துக்களை பேசி வருகிறார். இந்நிலையில், தனது மகளை விட்டு பிரிந்திருப்பது குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நித்யா தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் லைவ் வந்து தாடி பாலாஜி பேசியவற்றை மறுத்து உள்ளார்.

பாலாஜி தன்னை அவதூறாக பேசிய அனைத்து ஆடியோக்களும் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை நம்ப வேண்டுமானால் யூடுயூபில் வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது மகளையும் பாலாஜி அவதூறாக பேசியுள்ளதாகவும், தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் நடிப்பதாகவும் கூறியுள்ளார். கூடவே அவரது மகள் ஏன் அப்பா இப்படி நடிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும், நித்யா தன்னை வைல்டு கார்டு என்ட்ரியாக அனுப்பினால் கூட நேரடியாக கேட்டு விடுவேன் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸிற்கு பிறகு மீண்டும் ஜோடி போட்ட அமீர் & பாவனி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் நெட்டிசன்கள் பலரும் ஏன் குழந்தையையும் இப்படி மீடியாவிற்கு காட்டி அவரது எதிர்காலத்தை கெடுக்கிறீர்கள் என்றும், வாய்ப்புக்காக தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!