பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!

0
பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவை காதலித்து வரும் கோபி அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் பாக்கியாவை விவாகரத்து செய்யப் போவது போல அடுத்த ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

மக்களின் பேராதரவுடன் சுமார் 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முன்னணி சீரியல் ‘பாக்கியலட்சுமி’. ஒரு சாதாரண குடும்பத் தலைவியான பாக்கியா என்பவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் இந்திய சமுதாயத்தில் ஒரு குடும்பத் தலைவியின் நிலை, ஒரு அம்மாவாக தனக்கான தேவைகளை மறந்து விட்டு பிள்ளைகளுக்கு செய்யும் சேவை, கணவருக்கு செய்யும் பணிவிடை என தன்னை தானே மாற்றிக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக இருப்பதால் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

தனது கணவரை நேரலையில் அடித்த “பிக் பாஸ்” தாமரை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

இந்த கதையில் பாக்கியா என்பவர் மக்களால் ரசிக்கப்படக் கூடிய கதாப்பாத்திரமாக இருந்து வர, அந்த அளவுக்கு வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதித்து வருவது பாக்கியாவின் கணவர் கோபி கதாபாத்திரம் தான். இந்த சீரியலில் கோபி கதாப்பாத்திரம் மனைவியை மதிக்காத ஒரு ஆணாக, திருமண வயதில் பிள்ளைகளை வைத்து கொண்டு காதல் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய பாத்திரமாக காட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் லீலைகளை மகன் எழில் மற்றும் அப்பா ராமமூர்த்தி அறிந்து கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் பாக்கியாவுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று கணித்துள்ள கோபி, ராதிகா உடனான தனது காதலை தொடர்ந்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது இவர் சொல்லும் பொய்கள் மூலம் மாட்டிக்கொண்டு பாக்கியாவிடம் விழிக்கும் காட்சிகள் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கிடையில் பாக்கியாவை வெறுக்கும் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு வருகிறார். அதற்கேற்றார் போல இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு வரும் கோபியை அவரது அம்மா, இவர் ராதிகாவை திருமணம் செய்யப் போகிறவர் என்று உறவினரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்.

விஜய் டிவியில் ‘ பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியல் விரைவில் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

மேலும் கோபிக்கு விவாகரத்து ஆகி விட்டதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்றும் கூறுகிறார். இதனால் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் கோபியின் அடுத்த திட்டம் பாக்கியாவை விவாகரத்து செய்வதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மறுபக்கத்தில் கோபியின் காரில் இருக்கும் மயூவின் துணிக்கடை பில்லை பார்க்கும் பாக்கியா கோபி பற்றிய உண்மையை அறிந்து கொள்வாரா என்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here