தனது கணவரை நேரலையில் அடித்த “பிக் பாஸ்” தாமரை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
தனது கணவரை நேரலையில் அடித்த
தனது கணவரை நேரலையில் அடித்த "பிக் பாஸ்" தாமரை - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
தனது கணவரை நேரலையில் அடித்த “பிக் பாஸ்” தாமரை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பிக்பாஸ் தமிழ் சீசன் 5” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய போட்டியாளர்களுடன் 90 நாட்களுக்கு மேல் இருந்த தாமரை செல்வி யூடுப் நேரலையில் தனது கணவரை செல்லமாக அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் அபிமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும், இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் அதில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அதில் பலர் தொலைக்காட்சி அனுபவம் இருந்த பலர் இருந்தனர். ஆனால் ஊர் ஊராக சென்று நாடகம் போடும் நாடக கலைஞரான தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக களமிறங்கினார். அவர் வந்த முதல் நாளில் நான் இது போல வசதிகளை பார்த்ததே இல்லை. அதனால் என்னை வெளியே அனுப்பாதீங்க என சொன்னது முதல் அனைத்தும் மக்களை பெரிதும் கவர்ந்தது.

விஜய் டிவியில் ‘ பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியல் விரைவில் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

சாதாரண பெண் ஒருவர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விளையாடியதால் அவருக்கு ஏகப்பட்ட பேர் ஆதரவு கொடுத்தனர். அதன் படி பலமுறை நாமினேட் செய்யப்பட்டாலும் அவர் மக்களின் வாக்குகளின் படி காப்பாற்றப்பட்டார். அதன் காரணமாக 95 நாட்கள் வரை அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதன் பின் அவர் யாரும் எதிர்பாராத விதத்தில் வெளியேறினார். அது கமல் சாரை கூட வருத்தப்பட வைத்தது. வெளியே வந்து அவர் மற்ற பிக்பாஸ் பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிற்கு திருமணம், கோபிக்கு அம்மா வைத்த செக் – அடுத்து வரும் ட்விஸ்ட்!

மேலும் தனியாக யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நேற்று ரசிகர்களிடம் அவர் நேரலையில் பேசிய போது ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். பின் அவருடைய கணவர் அவரை கலாய்க்க செல்லமாக அடித்து விளையாடினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!