விஜய் டிவியில் ‘ பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியல் விரைவில் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியில் ' பாரதி கண்ணம்மா சீசன் 2' சீரியல் விரைவில் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ' பாரதி கண்ணம்மா சீசன் 2' சீரியல் விரைவில் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ‘ பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியல் விரைவில் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மிகவும் பரபரப்பாக சென்று வரும் நிலையில், தற்போதைய சீசன் விரைவில் முடிவடைய இருக்கிறது. இதனால் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் புதிதாக தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான் தற்போது சின்னத்திரையின் ஒட்டு மொத்த ஹாட் டாபிக் ஆக உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் கதைக்களம் சற்று வித்தியாசாக இருப்பதால் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளது. மருத்துவரான பாரதி தான் காதலித்து திருமணம் செய்த மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட தொடங்குகிறார். இதனால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து காட்டுகிறார். இவர்களுக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற விஷயம் தெரியாமல் ஆளுக்கு ஒரு குழந்தையை வளர்த்து வருகின்றனர்.

மீண்டும் வெண்பா உடன் இணைந்த பாரதி, DNA டெஸ்ட் எப்போது? பரீனாவின் இன்ஸ்டா பதிவு!

இந்நிலையில் கண்ணம்மா மீது பாரதி வைத்திருந்த கோவத்தை விட்டு இனி அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வாழலாம். குழந்தைகளையும், கண்ணம்மாவையும் நன்றாக பார்த்துக் கொள்வதகாவும் பாரதி கூறுகிறார். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். கண்ணம்மா தான் துரோகம் செய்து கொண்டதாக ஒத்துக் கொண்டால் இது அனைத்தும் நடக்கும் என்றும் கூறுகிறார். இதனால் மீண்டும் கண்ணம்மா கோவப்பட்டு பாரதியின் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

விவகாரத்திற்கு பின் மீண்டும் இணையும் சமந்தா, நாக சைதன்யா ஜோடி? ரசிகர்கள் குழப்பம்!

இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் சீசன் விரைவில் முடிவடைய போவதாகவும், இதன் 2ம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக முதலில் நடித்து வந்த ரோஷினி தான் சீசன் 2ல் நடிக்க இருப்பதாகவும், இதனால் வினுஷா கதையில் இருந்து விலக இருப்பதாகவும் தெரிகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய ரோஷினி மீண்டும் அதே சீரியலில் வர உள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!