“பாக்கியலட்சுமி” சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு – ப்ரோமோ ரிலீஸ்!

0
"பாக்கியலட்சுமி" சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு - ப்ரோமோ ரிலீஸ்!
“பாக்கியலட்சுமி” சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்துள்ள நிலையில் விவாகரத்து வாங்க இருவரும் நீதிமன்றத்தில் நிற்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போனதை நினைத்து குடும்பமே வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் கோபி அப்போது கூட திருந்துவதாக இல்லை. மறுபக்கம் ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் உடனே விவாகரத்து வாங்க வேண்டும் என வற்புறுத்தி வக்கீல் அலுவலகத்திற்கு அழைத்து வருகிறார். அங்கே வக்கீல் நோட்டீஸ் ஒன்றை கொடுத்து அதில் உங்க மனைவியின் கையெழுத்து வேண்டும் என சொல்கிறார்.

‘பிக் பாஸ்’ சீசன் 5 தாமரையுடன் பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் – அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

கோபி விவாகரத்து பத்திரத்துடன் வீட்டிற்கு வர அங்கே சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. அதனால் கோபியால் அன்று கையெழுத்து வாங்க முடியவில்லை. ஆனால் ராதிகா அடிக்கடி போன் செய்து கையெழுத்து பற்றி கேட்கிறார். இந்நிலையில் கோபி பாக்கியாவிடம் கையெழுத்து வாங்குவாரா என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி பாக்கியாவின் நடத்தையை பற்றி தவறாக சொன்னால் தான் விவாகரத்து கிடைக்கும் என காட்டப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வெண்பா ஃபரீனாவின் புது அவதாரம் – குவியும் லைக்குகள்!

அதை நினைத்து கோபி வருத்தமாக இருக்கிறார். மறுபக்கம் இனியாவின் அப்பா அம்மா பிரிந்ததால் அவர் கவலையுடன் இருக்கின்றார். கோபி பாக்கியா நீதிமன்ற வாசலில் நிற்க நீதிபதி விவகாரத்திற்கான காரணத்தை கேட்கிறார். அப்போது கோபி என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் இனி இப்படி நடக்க வாய்ப்பில்லை. மேலும் இன்றைய எபிசோடில் பாக்கியா விவாகரத்து பத்திரத்தை படிக்காமல் கையெழுத்து போட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here