‘பிக் பாஸ்’ சீசன் 5 தாமரையுடன் பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் – அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பிக் பாஸ்' சீசன் 5 தாமரையுடன் பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் - அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
'பிக் பாஸ்' சீசன் 5 தாமரையுடன் பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் - அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
‘பிக் பாஸ்’ சீசன் 5 தாமரையுடன் பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன் – அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் கலந்து கொண்டு வரும் போட்டியாளர் தாமரை செல்வி, சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் நடிகர் சிவகார்த்திக்கேயன் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக சொன்ன தகவல் ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

தாமரை செல்வி

விஜய் டிவியில் கடந்த மாதம் வரை ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்திருந்த ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரை செல்வி. நாடக கலைஞரான தாமரை செல்வி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வந்தார். அதனால் அவர் சீசன் 5ன் இறுதி கட்டத்தில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் 90 நாட்கள் கழித்து ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வெண்பா ஃபரீனாவின் புது அவதாரம் – குவியும் லைக்குகள்!

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரை வெளியேறுவதற்கு முந்தைய வாரத்தில் பல லட்சங்கள் மதிப்புள்ள பணப்பெட்டி ஒன்று கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பெட்டியை தாமரை செல்வி எடுப்பார் என்று பலரும் கணித்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அதனை சிபி எடுத்து சென்றிருந்தார். இந்நிலையில் சீசன் 5ன் இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்ட தாமரை செல்வி மீண்டுமாக ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியிலும் வழக்கம் போல அனைவரிடமும் அன்பாக இருந்து வரும் தாமரை, அவ்வப்போது சில சண்டை, சச்சரவுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் தன்னுடைய சக போட்டியாளர்களான சுருதி மற்றும் சுஜா வருணியிடம் பேசிக்கொண்டிருக்கும் தாமரை செல்வி, பிக் பாஸ் சீசன் 5ல் இருந்து வெளியேறியவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

காதலியை கரம் பிடித்த பிரபல யூடுபர் மதன் கௌரி – கோலாகலமாக திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!

அதாவது, ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் ராஜுவின் மொபைல் போனில் இருந்து பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன், அவரது அம்மாவுக்கு சீசன் 5ல் தாமரை செல்வியை மிகவும் பிடித்திருந்ததாகவும், அவர் பணப்பெட்டியை எடுக்காதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தது என்றும் கூறி இருக்கிறார். அதற்கு, பணம் தானே, அதை சம்பாதித்து கொள்ளலாம் என்று தாமரையும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த தகவலை தாமரை, சுருதியிடம் பகிர்ந்து கொள்வது போல வெளியான ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here