‘பாக்கியலட்சுமி’ இனியா நேஹாவின் புதிய கெட்அப்பில் வைரலாகும் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியாவாக நடித்து வரும் நடிகை நேஹா தற்போது தாவணி உடையணிந்து கிராமத்து பெண் தோற்றத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹேமா
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நடிகை நேஹா தற்போது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இனியா என்ற கதாப்பாத்திரத்தில் கடைக்குட்டி வாரிசாக, அப்பாவின் லிட்டில் பிரின்சஸ் ஆக, எழில் அண்ணனின் செல்ல தங்கையாக நடித்து வரும் நேஹா மக்களின் கவனம் ஈர்த்து வருகிறார். ஏற்கனவே சன் டிவியின் ‘சித்தி 2’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள நேஹாவுக்கு இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று தந்திருக்கிறது.
விஜய் டிவியில் ஜனவரி 17 முதல் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் உற்சாகம்!
இப்படி இருக்க விஜய் டிவியின் பிரைம் நேர சீரியலான ‘பாக்கியலட்சுமி’ இல் தற்போது பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது, பொங்கல் கொண்டாடுவதற்காக பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து இந்த சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் மண் அடுப்பில் பொங்கல் வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பழைய காலத்து விளையாட்டை நினைவுபடுத்துவது உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்கள் இடம்பெற இருக்கிறது.
“பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை – கணவர் சொன்ன விளக்கம்!
இப்போது கிராமத்து லொகேஷனில் வைத்து ‘பாக்கியலட்சுமி’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நடிகை நேஹா பட்டு, தாவணி அணிந்து கிராமத்து லுக்கில் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ என்ற பாடலுக்கு அழகாக நடனமாடி ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோவை நடிகை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ அதிகளவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.