“பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை – கணவர் சொன்ன விளக்கம்!

0
"பிக் பாஸ்" வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை - கணவர் சொன்ன விளக்கம்!
“பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை – கணவர் சொன்ன விளக்கம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேறிய தாமரை இன்னும் வீட்டிற்கு வராதது குறித்து அவரது கணவர் ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இறுதி வாரத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் டாப் 5 போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த சீசனில் பல புதுமுக போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அவர்களில் சின்னத்திரை பற்றிய முன்னறிவு இல்லாத நாடக கலைஞராக பிரபலமானவர் தான் தாமரை செல்வி. அவர் முதலில் இந்த நிகழ்ச்சிக்குள் வந்ததில் இருந்தே அவர் மீண்டும் மக்கள் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.

ஆர்யனுடன் திருமண நாளை கொண்டாடும் ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்த நிகழ்ச்சி பற்றி தெரியாமல் அவர் நடந்து கொள்வது அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் விளையாட்டு என்று வந்தால் அவர் தன்னுடைய முழு திறமையையும் காட்டி வெற்றி பெற்றார். அதிலும் மக்களிடம் நல்ல பெயரை சம்பாரித்தார். மேலும் அவருடைய பாசமான குணமே ஏகப்பட்ட தமிழ் மக்களை கவர்ந்தது, அதனால் அவர் இறுதி சுற்றிற்கு வர வேண்டும் என மக்கள் விருப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.

சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ தொல்காப்பியன் – ரசிகர்கள் உற்சாகம்!

அடுத்த வாரம் இறுதி சுற்றில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விடும். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் தாமரை அவரது வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் தாமரையின் கணவரிடம் இது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. இது பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி அவர் இன்னும் சென்னையில் தான் இருக்கிறார் எனவும் இன்னும் 4, 5 நாட்களில் அவர் வீட்டிற்கு வந்து உங்கள் எல்லாரிடமும் பேசுவார் என விளக்கமளித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here