‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் இணைந்த ‘பாக்கியலட்சுமி’ மயூரா – வைரல் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவுடன் இணைந்த 'பாக்கியலட்சுமி' மயூரா - வைரல் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவுடன் இணைந்த 'பாக்கியலட்சுமி' மயூரா - வைரல் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் இணைந்த ‘பாக்கியலட்சுமி’ மயூரா – வைரல் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ஷீலா, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இணைந்திருக்கும் நிலையில் அந்த சீரியலில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரம் ஷெரினுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஷீலா

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இத்தொடரில் லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் ஊனமுற்றவராக, வீல் சேரில் அமர்ந்தபடி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பயணித்து வந்தவர் நடிகை ஷீலா. சின்னத்திரை சீரியல்களில் பல ஆண்டு கால அனுபவம் உள்ள நடிகை ஷீலாவுக்கு மக்களிடையே ஒரு முக்கிய அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தான்.

கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இப்படி இருக்க சமீபத்தில் நடிகை ஷீலா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு திடீரென விலக்கப்பட்டார். இந்த சம்பவம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, நடிகை ஷீலாவுக்கும் வருத்தம் அளிக்கக்கூடியதாக தான் அமைந்தது. என்றாலும் இந்த சீரியலில் நடிகை ஷீலாவை மிஸ் செய்து வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய விதமாக, இவர் விஜய் டிவியின் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

விவாகரத்து பெரிய வலி, மனம் உருகிய நடிகை சமந்தா – ரசிகர்கள் ஆறுதல்!

தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகாவுக்கு அம்மாவாக நடித்து வரும் இவர் மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறார். என்றாலும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக திரையில் தோன்றாத இவர் மீண்டுமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மயூராவாக நடித்து வரும் பேபி ஷெரினுடன் இணைந்து, நடிகை ஷீலா எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!