கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கண்ணம்மா ரோஷினியை பிரிய முடியாமல் கதறி அழுத சக நடிகை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த ரோஷினி தொடரை விட்டு விலகும் போது சக நடிகை ஒருவர் கதறி அழும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நெகிழ்ந்து போயியுள்ளனர்.

கண்ணம்மாவின் பிரிவு:

சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் மிகவும் சகஜமாகவும், நட்புடனும் பழகி வருவது சகஜம் தான். இவர்கள் படப்பிடிப்பு தளங்களில் அதிக நேரம் ஒன்றாக இருப்பதால் இவர்களின் நட்பு எப்போதும் ஒரு குடும்பத்தை நியாபகபடுத்தும் அளவில் இருப்பதையும் நாம் கண்டு வருகிறோம். ஷூட்டிங்கில் ஓய்வு நேரத்தில் இவர்கள் ஒன்றாக எடுக்கும் வீடியோக்கள் இதனால் தான் வைரலாகும் அளவிற்கு செல்கிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் கண்ணம்மா. சின்னத்திரையில் கதையின் நாயகியாக இருபவருக்கென்று உள்ள இலக்கணங்களை தகர்த்து தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் ரோஷினி.

‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூற முடியாத அளவிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தினார். மிகவும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் மக்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார். இவர் வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்து விட்டதால் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகியுள்ளார். இவரின் மாற்றத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தானே வேண்டும். வேறு வழியில்லாமல் மக்கள் தொடர்ந்து கதையின் போக்கின் சுவாரசியத்திற்காக தொடரை பார்த்து வருகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

முன்னதாகவே ரோஷினி பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கடைசி நாள் அன்று கேக் வெட்டி பிரியாவிடை பெற்று சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில், தொடரில் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள் அனைவரும் ரோஷினியை வாழ்த்தி அனுப்பியதை பார்த்தோம். ஆனால் சௌந்தர்யா வீட்டில் சமையல் வேலை செய்யும் வேலைக்கார அம்மாவாக நடிக்கும் நடிகை ரோஷினி தொடரை விட்டு விலகுவது ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழுகிறார். அவரை ரோஷினி சமாதானம் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போய் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!