விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை, நடிகர்கள் பெறும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்ட ராதிகா, டீச்சர் பாக்கியாவின் வாழ்க்கையை யோசித்து கோபியை விட்டு விலகுவாரா? அல்லது தன்னுடைய அம்மா பேச்சை கேட்டு கோபியுடன் மீண்டும் மயூவுக்காக இணைவாரா? ராதிகாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளுடனும் தொடர் நகர்கிறது. அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் வரிசையில் டிஆர்பி ரேட்டிங்கில் இப்போது டாப் லிஸ்டில் இருக்கும் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான். தொடரின் கதைக்களம் தமிழ்நாட்டு மக்களின் முக்கியமாக குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று இந்த ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அதிக வெற்றி கோப்பைகளை தட்டி சென்றுள்ளது. சீரியலில் ட்ரெண்ட் என்றால் அது கோபி தான். அந்த அளவுக்கு தொடரை விறுவிறுப்பாகவும், காமெடியாகவும் கொண்டு செல்லும் ரோல் கோபிக்கு தான் இருக்கிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – பெற்றோருக்கு ஷாக் நியூஸ்!
இப்படி கோபியின் ரோல் ஆரம்பத்தில் மக்களிடையே அதிக விமர்சனங்களை பெற்றாலும் நாளடைவில் இவரது நடிப்பால் அதிகளவு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் பாக்கியாவிடம் எப்போது சிக்குவார்? என எதிர்பார்த்த மக்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக சிக்கி சின்னாபின்னம் ஆகிவருகிறார். ஆனாலும், சீரியலில் தற்போது பாக்கியாவுக்கு தைரியம் வந்து எதிர்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கூடிய விரைவில் கோபி பாக்கியாவிடம் சிக்குவார். மேலும், எல்லா உண்மையும் தெரிந்து கொண்ட ராதிகாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் தான் ட்விஸ்ட்டே இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடர் கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாக்கியலட்சுமியான சுசித்ரா அவர்களுக்கு ஒரு நாள் 15000 ரூபாயும், கோபியாக வரும் சதீஷ் அவர்களுக்கு ஒரு நாள் 12,000 ரூபாயும், ராதிகா அவர்களுக்கு 12,000 ரூபாயும், ஜெனி, செழியன் மற்றும் எழில் அவர்களுக்கு ஒரு நாள் 10,000 ரூபாயும், இனியாவுக்கு 8,000 ரூபாயும் வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.