விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? கன்னடம் டூ தமிழ் சினிமா பயணம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? கன்னடம் டூ தமிழ் சினிமா பயணம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? கன்னடம் டூ தமிழ் சினிமா பயணம்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை தனது தத்ரூப நடிப்பால் வெளிக்காட்டி வருபவர் தான் நடிகை சுசித்ரா. அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தான் நடிகை சுசித்ரா. அவருடைய நடிப்பு தான் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கன்னட நடிகையான இவர் பதினான்கு வயதிலே நடிக்க தொடங்கிவிட்டாராம். இவர் முதன்முதலில் ஆம் உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பாவனியை அடிக்க வரும் தாமரை, சமாதானப்படுத்தும் போட்டியாளர்கள் – கலவர பூமியாகும் பிக்பாஸ் வீடு!

அதோடு தற்போது 2019ல் வெளியான எஜமான் என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். இவர் இருபதிற்க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ரா அவர்களுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. உதய டிவியில் ஒளிபரப்பான மனே தன என்ற தொடரின் மூலம் கன்னட சின்னத் திரைக்கு அறிமுகமானார். மேலும் இவர் காவியா அஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். இவ்வாறு கன்னட தொடர்களில் நடித்துக் கொண்டு இருந்தவருக்கு தெலுங்கு சின்னத் திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மகாவாக களமிறங்கிய அரண்மனைக்கிளி மோனிஷா – ரசிகர்கள் ஷாக்!

மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து வந்துள்ளர். அதன் பின் தமிழில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2014ல் AL விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் உமா என்ற பெயரில் நடித்தார். அவருடைய நடிப்பு காரணமாக ஏராளாமான ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here