ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த “பாக்கியலட்சுமி” ஜெனி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த
ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த "பாக்கியலட்சுமி" ஜெனி - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
ரீல் அம்மாவுடன் ரீல்ஸ் செய்த “பாக்கியலட்சுமி” ஜெனி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் மற்றும் அதே சீரியலில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் மோனா இணைந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஒன்று செய்திருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. பணத்தை தொலைத்த பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் அளவிற்கு கோபி கோபமடைய, எழில் பணத்தை மீட்டு வருகிறார். பின் கோபிக்கு பண தேவை ஏற்பட பாக்கியா கோபியின் அலுவலகம் சென்று பணம் கொடுத்து உதவி செய்கிறார். அதன் பின் கோபி மனம் வருந்த, நிலைமை சரியாகிறது. மேலும் குடும்பத்தில் இப்போது தான் அமைதி வர மீண்டும் ஒரு புயல் அடிக்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனா கடந்து வந்த பாதை – ‘LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை’!

அதாவது குழந்தையை கலைக்க வேண்டும் என செழியன் ஜெனியிடம் சண்டை போட, ஜெனி பதிலுக்கு சண்டை போட்டு தூங்க செல்கிறார். பின் தூங்கி எழும்போது வயிற்று வலி வர குழந்தை கலைந்து விட்டது என டாக்டர் சொல்கின்றனர். செழியன் தான் குழந்தை இல்லாததற்கு காரணம் என ஜெனி சொல்ல, செழியனும் வருத்தப்படுகிறார். ஜெனியின் அம்மா அப்பா வந்து பார்க்க நானும் வீட்டிற்கு வருகிறேன் என ஜெனி சொல்லி கிளம்புகிறார். மேலும் செழியன் அவரை தடுக்க கையை உதறி விடுகிறார்.

மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா – விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை திவ்யா கணேஷ் மற்றும் அவரது அம்மா மரியம் கதாபாத்திரத்தில் நடிக்கும் மோனா இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். அதில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ பாடலிற்கு மகளும் அம்மாவும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதுவும் இருவரும் ஒரே மாதிரி ஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருக்கின்றனர். அதை பார்த்த ரசிகர்கள் மகள் அம்மா போலவே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொருவர் குழந்தை கலைந்த சோகம் இல்லாமல் இப்படி சந்தோசமாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!