‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனா கடந்து வந்த பாதை – ‘LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை’!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கம்பம் மீனா கடந்து வந்த பாதை - 'LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை'!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கம்பம் மீனா கடந்து வந்த பாதை - 'LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை'!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனா கடந்து வந்த பாதை – ‘LIC ஏஜெண்ட் முதல் சின்னத்திரை வரை’!

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி தற்போது 200 திரைப்படங்களை நடித்து முடித்து சின்னத்திரையில் முகாமிட்டுள்ள நடிகை கம்பம் மீனாவின் கடந்த கால வாழ்க்கை குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

கம்பம் மீனா

விஜய் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை கம்பம் மீனா. கூட்டுக் கூடும்ப வாழ்க்கையை, அதன் இன்ப துன்பத்தை அழகாக சித்தரிக்கும் ஒரு சிறப்பான அம்சத்தை இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரதிபலிக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த சீரியலில் தனத்தின் அண்ணி அதாவது கஸ்தூரி என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது வில்லத்தனம் கலந்தவொரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை கம்பம் மீனா.

மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா – விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கு முன்னதாக பல்வேறு சீரியல்களில் நடித்து தற்போது பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகை கம்பம் மீனாவின் வாழ்க்கை குறித்த சில விஷயங்களை இப்பதிவில் காணலாம். தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படக்கூடிய பாரதிராஜா அவர்களின் ‘தெற்கத்திபொண்ணு’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் மீனா. சிறு வயதில் தந்தையை இழந்து, பள்ளிப் படிப்பின் போது திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுக்கு தாயும் ஆனார் இவர்.

தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக LIC ஏஜெண்டாக பணியாற்றி வந்த இவருக்கு ‘தெற்கத்திபொண்ணு’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொண்ட இவர் படிப்படியாக முன்னேறி சின்னத்திரையையும் தாண்டி தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தியோசி, ராவணன், கடல், கைதி, சகுனி என பல திரைப்படங்களில் நடித்துள்ள இவரது நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

இதில் ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த ‘இரட்டை சுழி’ படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கு மருமகளாகவும் கம்பம் மீனா நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருக்கும் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் தேன்மொழி ஆகிய சீரியல்களில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனுடன் நடிகை ராதிகாவின் ரசிகையான இவர் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இது தவிர ஒரு சீரியல் அல்லது திரைப்படத்தில் மோசமாக வில்லியாக நடிக்கும் எண்ணமும் இவருக்கு இருக்கிறதாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!