பாக்கியா மீது கோவப்படும் கோபி, பழையபடி பேச முயற்சி செய்யும் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியா மீது கோவப்படும் கோபி, பழையபடி பேச முயற்சி செய்யும் தாத்தா - இன்றைய
பாக்கியா மீது கோவப்படும் கோபி, பழையபடி பேச முயற்சி செய்யும் தாத்தா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியா மீது கோவப்படும் கோபி, பழையபடி பேச முயற்சி செய்யும் தாத்தா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் தாத்தாவை பேச வைக்க சொல்லி கொடுக்கிறார். ராமமூர்த்தியும் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார். பின் கோபி தன்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் பாக்கியாவை குறை சொல்கிறார். அதனால் பாக்கியா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் ராமமூர்த்தியை பேச வைக்க சில வார்த்தைகளை சொல்லி கொடுக்கிறார். ராமமூர்த்தி சிரமப்பட்டு பேசுகிறார். அப்போது இனியா வர தாத்தா பேசுவது புரிகிறதா என கேட்க சொல்கிறார். இனியாவிற்கு முதலில் புரியாமல் இருக்க பின் புரிய வருகிறது. பின் ஈஸ்வரி என இனியா சொல்ல சொல்ல தாத்தாவும் சொல்கிறார். இனியா வேகமாக சென்று பாட்டியை அழைத்து வர தாத்தா ஈஸ்வரி என கூப்பிட்டதை நினைத்து ஈஸ்வரி மிகவும் சந்தோசப்படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் இரவு நீண்ட நேரமாகியும் கோபி வராமல் இருக்க பாக்கியா தூங்காமல் கோபிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வர இன்னும் நீ தூங்கவில்லையா என கேட்கிறார். அப்போது பாக்கியா அவருக்காக காத்திருக்கிறேன் என சொல்ல, அவன் போன் செய்து நேரமாகும் என சொன்னானா என கேட்கிறார். பாக்கியா இல்லை என சொல்ல இப்போது போன் செய்து பார் என சொல்கிறார். பாக்கியா போன் செய்ய ஆனால் கோபி போனை எடுக்கவில்லை.

அதனால் ஈஸ்வரி கோவமாக பாக்கியாவுடன் அமர்ந்து கொள்கிறார். அப்போது கோபி வந்து காரில் சத்தம் போட்டு கதவை திறக்க சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி நீ போகாதே என சொல்ல, கோபி உள்ளே வந்து பாக்கியாவை சத்தம் போடுகிறார். அப்போது ஈஸ்வரி இரவு இவ்வளவு நேரம் என்ன செய்தாய் என கேட்க கோபி அலுவலகத்தில் வேலை இருந்ததாக சொல்கிறார். 12 மணி வரை வேலை பார்த்தது நீ தான் என சொல்ல, உன்னை பார்த்து தான் பிள்ளைகள் வளர்வார்கள் என சொல்கிறார். கோபி ஈஸ்வரி பேசியதால் பாக்கியா மீது கோபப்படுகிறார்.

மீனாவின் நிலைமையை புரிய வைத்த தனம், மூர்த்தி எடுத்த நல்ல முடிவு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் கோபி ரூமிற்கு செல்ல ஈஸ்வரி எழில் இவனிடம் பேசவே மாட்டேங்குறான், அவர் இவனை பார்த்தால் கோபப்படுகிறார். அதனால் இவனை கண்காணிக்க வேண்டும் என ஈஸ்வரி சொல்கிறார். கோபி ரூமில் இருக்க ராதிகா நாளை குடும்பத்தை பார்க்க வேண்டும் என மெசேஜ் செய்கிறார். பின் கோபி போன் செய்ய நான் கண்டிப்பாக குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா சொல்கிறார். அதனால் கோபி கோவப்பட அப்போது பாக்கியா வருகிறார்.

எதாவது பிரச்சனையா என கேட்க கோபி என் அம்மாவிடம் மாட்டிவிட திட்டமிட்டாய், உன்னை யார் எனக்காக காத்திருக்க சொன்னா என கோபி கேட்க, நான் காத்திருப்பேன் என தெரியாமல் தான் காரில் சத்தம் போட்டு கதவை திறக்க சொன்னீங்களா என கேட்க கோபிக்கு பயங்கரமாக கோவம் வருகிறது. என்னுடைய எல்லா பிரச்சனைக்கும் நீ ஒரு ஆள் தான் காரணம் என கோபி பேச பாக்கியா வருத்தப்படுகிறார். மறுநாள் தாத்தா எல்லார் பெயரையும் சொல்லி சந்தோசமாக இருக்க ஆனால் பாக்கியா மட்டும் வருத்தமாக இருக்கிறார். உடனே எழில் அவரை விட்டுவிடு நாங்க எல்லாரும் இருக்கோம் என சொல்ல எப்போ பார்த்தாலும் இதை ஏன் சொல்கிறாய் என பாக்கியா எழில் மீது கோபப்படுகிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here