கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி – இன்றைய எபிசோட்!

0
கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு வந்து உண்மை எல்லாம் சொல்லிவிடுகிறார். மறுநாள் அவர் எழுந்திருக்க என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறார். பின் எழில் வந்து கோபியிடம் இனிமேல் குடித்துவிட்டு வர வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொள்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு வந்து உண்மையை எல்லாம் பாக்கியாவிடம் சொல்லிவிடுகிறார். மறுநாள் போதை தெளிந்து எழுந்திருக்க அப்போது என்ன நடந்தது என நியாபகம் இல்லாமல் இருக்கிறார். அப்போது ராதிகா போன் செய்து இருக்கிறாளா என பார்க்க ராதிகா ஒரு முறை கூட போன் செய்யாமல் இருக்கிறார். அதனால் என்ன ஆனது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அப்போது எழில் வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

எழில் கோபியிடம் நேற்று பயங்கரமாக குடித்துவிட்டு வந்தீர்கள், அம்மா உங்களை காணாமல் தவித்து போனார். உங்க நண்பர் போன் செய்து நீங்க குடித்துள்ளதாக சொன்னார் என சொல்ல, வேற என்ன சொன்னான் என கோபி பதட்டம் அடைகிறார். வேறு ஒன்னும் சொல்லவில்லை என எழில் சொல்ல, அம்மா உங்களை தேடி ரோட்டில் நின்றார். உங்களுக்கு பிரச்சனை இருப்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை எல்லாம் நீங்க சரி செய்ய வேண்டும். இப்படி குடித்துவிட்டு வருவது சரியான தீர்வாகாது என சொல்கிறார்.

அதை கேட்டு கோபி வருத்தப்படுகிறார். இனிமேல் குடிக்கமாட்டேன் என சொல்ல, எழில் மோர் கலந்து குடித்தால் தலைவலி சரியாகிவிடும் என சொல்கிறார். அப்போது கோபி உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என கேட்கிறார். மறுபக்கம் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க இனியா எப்போதும் ஒரே சாப்பாடை சாப்பிட்டு போர் அடிப்பதாக சொல்கிறார். பின் கோபி சாப்பிட வரவில்லையா என கேட்க வரேன் என சொன்னதாக பாக்கியா சொல்கிறார். அப்போது கோபி வந்து பாக்கியாவிடம் காபி கேட்கிறார். சாப்பிடும் நேரத்தில் ஏன் காபி குடிக்க போகிறாய் என சொல்ல, கோபி முகம் சரியில்லை என ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் நினைக்கின்றனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இணையதளம் மூலம் சேவைகள்!

பின் கோபி பாக்கியாவிடம் மோர் கேட்கிறார். எழில் வந்து நிறைய தண்ணீர் குடிங்க என சொல்கிறார். என் பையன் வந்து இதெல்லாம் சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது என கோபி பாக்கியாவிடம் சொல்கிறார். பின் கோபி நடந்தது எல்லாத்தையும் நினைத்து பார்க்க அப்போது பாக்கியா அமைதியாக இருப்பதை பார்த்து கோபிக்கு சந்தேகம் வருகிறது. பின் காருக்கு சென்ற கோபி என்ன நடந்திருக்கும் என நினைத்து பார்க்கிறார். ராதிகா வீட்டிற்கு சென்றது எல்லாம் அவருக்கு நினைவிற்கு வருகிறது. பின் ராதிகா வீட்டிற்கு செல்ல அங்கே மயூரா இருக்கிறார்.

அம்மா கூட ஏன் சண்டை என மயூரா கேட்க அம்மா சிரிக்கவே இல்லை என மயூரா சொல்கிறார். அப்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்ல, ராதிகா வந்து மயூராவை இந்த பக்கம் வர சொல்கிறார். கோபி ஏன் என கேட்க, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இப்படி எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு வந்திருக்கீங்க என ராதிகா கேட்க, கோபி என்ன நடந்தது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here