கோபியை பிரிய முடிவு செய்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபியை பிரிய முடிவு செய்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
கோபியை பிரிய முடிவு செய்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபியை பிரிய முடிவு செய்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோர்ட் போக வேண்டும் என சொல்ல ஈஸ்வரி இதெல்லாம் தவறான முடிவு என சொல்கிறார். ஆனால் பாக்கியா கோபியை பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோர்ட் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து இன்று கோர்ட்டிற்கு போக வேண்டாமா என கேட்கிறார். உடனே செழியன் முதலில் அதை தூக்கி போடு அப்படி ஒன்றும் போக வேண்டாம் என சொல்ல, உன் அப்பா ஆசைப்பட்டு கேட்டதை கொடுக்க வேண்டாமா என கேட்கிறார் பாக்கியா. போகணும்ல, இன்னைக்கு தான? என பாக்கியா கோபியிடம் கேட்கிறார். உடனே ஈஸ்வரி, பாக்கியா உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா அவன் தான் புத்தி கெட்டு கோர்ட்டிற்கு போனால் நீ போக வேண்டுமா என கேட்கிறார்.

பின் பாக்கியா, அன்னைக்கு தெரியாமல் போனேன். ஆனால் இன்னைக்கு தெரிந்தே போகப் போகிறேன் என சொல்கிறார். தாத்தா, பாக்கியா கொஞ்சம் பொறு அவசரப்படாதே என சொல்ல, செழியன் “அப்பாவே கோவத்தில் எடுத்த முடிவு என விட்டுவிட்டார். நீ ஏன் பெரிதாக்குகிறாய்” என சொல்கிறார். பின் எழில், அம்மா இந்த விஷயத்தில் கூட முடிவெடுக்க கூடாதா என கேட்க? பாக்கியா நான் பேசிக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி, கோபி தான் உன்னிடம் மன்னிப்பு கேட்டான்ல என சொல்ல, பாக்கியா கோபியிடம், “நேற்று வந்து மன்னிப்பு கேட்டிங்களா” என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஈஸ்வரி நீ வீம்புக்காக பேசாதே என சொல்ல இது உன் இஷ்டத்துக்கு எடுக்கும் முடிவு இல்லை என சொல்கிறார். அவன் கோவமாக செய்தால் பதிலுக்கு நீயும் கோவமாக முடிவு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா என கேட்க, இனிமேல் எந்த தப்பும் செய்யமாட்டேன் என கோபி உன்னிடம் மன்னிப்பு கேட்டான்ல என ஈஸ்வரி கேட்கிறார். நீ புதுசா எதுவும் ஆரம்பிக்காதே என ஈஸ்வரி சொல்கிறார். நீங்க உங்க மகனை ரொம்ப நம்புறீங்க அத்தை நானும் நம்பிட்டு இருந்தேன். இவருக்கு நான் தேவை இல்லை. நீங்க, குடும்பம், பசங்க என சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க என சொல்கிறார்.

இவர் கேட்டதை நான் கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார். செழியன் ஏன் அம்மா இப்படி பேசுறீங்க என கேட்க, எழில் நீ பேசாமல் இரு என சொல்கிறார். பின் ஈஸ்வரி நீ தான் இப்படி எல்லாம் அவளுக்கு பேச சொல்லி கொடுத்தியா என கேட்க? பாக்கியா இத்தனை நாள் நீங்க பேசியதை கேட்டேன் இதுவரை இவருக்கு பிடித்தது தான் செய்தேன் இனிமேல் அதையே செய்கிறேன் என சொல்கிறார். உடனே தாத்தா நீ இப்போ கோர்ட் போனால் உன் வாழ்க்கையை அவனுக்காக விட்டு கொடுத்தது போல ஆகிவிடும் என சொல்கிறார்.

எல்லாரும் விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை என சொல்ல இனியா என்னை பற்றி யோசிக்கமாட்டியா என கேட்கிறார். நீ இந்த வீட்டை விட்டு சென்று விட்டால் நான் என்ன செய்வது என கேட்க, நான் உனக்கு அம்மாவாக இருக்க மாட்டேன் என சொல்லவே இல்லையே நான் உனக்கு அம்மாவாக இருப்பேன் என சொல்ல, செழியன் அந்த பேப்பரை தூக்கி போட சொல்கிறார். அந்த ராதிகா தான் ஊரை விட்டு சென்று விட்டார் என சொல்ல, செல்வி அதெல்லாம் போகவில்லை அக்கா அவங்களை பார்க்க போனாங்க என சொல்கிறார்.

கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின் ஈஸ்வரி, அங்கே நீ போக கூடாது கோபி செய்த தவறை உணர்ந்துவிட்டான் என சொல்கிறார். செழியன் இது ஒரே நாளில் முடிகிற விஷயம் இல்லை என சொல்ல, ஆனால் பாக்கியா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். ஈஸ்வரி உனக்கு ஆதரவாக தான் நான் பேசினேன் அவனை ஒரு முறை நீ மன்னிக்க வேண்டும் என சொல்ல, பாக்கியா இனிமேல் நான் இங்கே இருந்து மன்னிக்கவோ மன்னிப்பு கேட்கவோ மாட்டேன் என சொல்ல, பாக்கியா பேசுவதை கேட்ட கோபி, என்ன என்னை பழிவாங்குகிறாயா? என கோவமாக கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here