கோபியை ஏற்ற ராதிகா, வெறுப்பில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கோபியை ஏற்ற ராதிகா, வெறுப்பில் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபியை ஏற்ற ராதிகா, வெறுப்பில் பாக்கியா - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கோபியை ஏற்ற ராதிகா, வெறுப்பில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது கோபி மற்றும் பாக்கியா இருவரும் விவாகரத்து வாங்கி விட்டனர். இதனை அடுத்து ராதிகா மற்றும் கோபி இருவரும் திருமணம் செய்து கொளவர்களா? என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி தொடரின் பார்வையாளர்கள் எல்லோரும் எப்போடா கோபி பாக்கியாவிடம் சிக்குவார்? அப்படி ஒருவேளை கோபியின் உண்மை முகம் பாக்கியாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என பல சந்தேகங்கள் இருந்த போதிலும் ரசிகர்களை பொறுத்தவரை பாக்கியா இறுதிவரை ஏமாளியாக தான் இருப்பார் என ஒரு கெஸ் வைத்துக்கொண்டே இருந்தனர். ஆனால் தற்போது வரக்கூடிய எபிசோடுகளில் அனைத்தும் தலைகீழாக நடக்கிறதை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ‘அட நம்ம பாக்கியவா இது’ என்ற ஆச்சரியத்தை கொடுக்கிறது.

TN Job “FB  Group” Join Now

நேற்றைய எபிசோடில் கோபியும்,பாக்கியாவும் கோர்ட்டுக்கு போன விஷயம் பற்றி குடும்பத்தில் எல்லோரும் பேசி கொண்டிருக்க, உடனே இனியா அப்போ இனிமே அம்மாவும் அப்பாவும் ஒன்னா சேரவே மாட்டாங்களா என கேட்டு அழுவதுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து இன்று வீட்டுக்கு வந்த கோபியிடம் எல்லோரும் கோர்ட்டில் என்னாச்சு? என கேட்டகின்றனர். அதற்கு கோபி, எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே எனக்கும் பாக்கியாவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என கூறுகிறார். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய, அவளுக்கு உடம்பு பூரா அவ்வளவு திமிரு. இப்படி ஒரு நாள் எப்போ வரும்னு காத்திட்டு இருந்துருக்கா என கூறுகிறான்.

அதற்கு கோபியின் அப்பா, இதெல்லாம் நீ பத்த வைத்த நெருப்பு. அது தான் இப்போ நம்ம குடும்பத்தையே எரிக்கிது என்கிறார். உடனே ஈஸ்வரி என்ன வேணா இருக்கட்டும். ஒரு குடும்ப பொம்பள இப்படி பண்ணலாமா என திட்டுகிறார். அந்த சமயம் செழியன் நான் அம்மாக்கு அழைத்து பார்க்கிறேன் என சொல்லி போனை கையில் எடுக்க, உடனே கோபி இனிமே யாராவது என்னை மீறி அவ கூட தனிப்பட்ட முறைல உறவு வச்சுக்கிட்டா நான் நானாக இருக்க மாட்டேன் என சொல்லி மாடிக்கு சென்று விடுகிறார். இந்த பக்கம் எழில், பாக்கியாவை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்று பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளுமாறு கூறுகிறான்.

தமிழக பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

அதன் பிறகு ராதிகா, பாக்கியா கொடுத்த டைவர்ஸ் குறித்து நம்ப முடியாமல், அவள் அண்ணனை வக்கீலுக்கு போன் பண்ணி கேட்க சொல்கிறார். வக்கீலும் பாக்கியா ரொம்ப தெளிவா பேசி டைவர்ஸ் வாங்கிக்கிட்டாங்க என கூறுகிறார். இதனையறிந்த ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் அப்போ அந்த பாக்கியா இவ்வளவு நாளா இந்த விஷயத்துக்காக தான் காத்திட்டு இருந்துருக்கா போல, இனிமே நீ தான் முடிவு எடுக்கணும் என கூறுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here