நடப்பு நிகழ்வுகள் – 8 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 8 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 8 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 8 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

பாராளுமன்றத்தில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான  மசோதா 2023 ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • பாராளுமன்ற லோக்சபாவில் ஆகஸ்ட் 07 2023 அன்று அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான மசோதா 2023 ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது. 
  • கணிதம், பொருளியல் உள்ளிட்ட இயற்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அதன் மேம்பாடு ஆகியவற்றை சிறு குறு தொழில்முனைவோருக்கு வழங்குவதற்கான வழிமுறைகளை திருத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இதில் குறிப்பாக பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வாரியச் சட்டம், 2008 ஐ இந்த மசோதா ரத்து செய்து, அதன் கீழ் அமைக்கப்பட்ட பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வாரியத்தை கலைக்கிற செயல்முறையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

கம்போடிய மன்னர் சிஹாமோனி நாட்டின் புதிய பிரதமராக ஹன் மானெட்டை நியமித்துள்ளார்.

  • நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமரான சென்னின் மகன் ஹுன் மானெட்டை கம்போடியா மன்னர் சிஹாமோனி நியமித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆகஸ்ட் 07 அன்று வெளியிடப்பட்டுள்ள 7வது ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அந்நாட்டு அரசர் மானெட்டை பிரதமராக நியமித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மற்றும் கட்சியிலிருந்து அமைக்கப்பட்ட அவரது அமைச்சரவையானது ஆகஸ்ட் 22 அன்று நடைபெறும் “நம்பிக்கை வாக்கெடுப்பில்” கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையானது நிலவுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை அமைச்சகம் மற்றும் டிரெண்ட்ஸ் ஆராய்ச்சி மையம் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • UAE நாட்டின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் அதன் நடவடிக்கைகளாக உறுதிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகமானது TRENDS ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) ஆகஸ்ட் 2023 அன்று கையெழுத்திட்டுள்ளது.
  • நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் பிற பகிரப்பட்ட நலன்கள் தொடர்பான பல்வேறு துறைகளில் இரு நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் டிஜிட்டல் அடையாள மேம்பாடு திட்டத்திற்கு இந்திய அரசாங்கமானது ரூ.45 கோடி நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளது.

  • இலங்கை நாட்டின் டிஜிட்டல் நேர்மறையான மாற்றத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தனித்துவமான டிஜிட்டல் அடையாள மேம்பாட்டு திட்டத்திற்கு ஆதரவாக இந்திய அரசாங்கமானது 45 கோடி ரூபாய் நிதி உதவியை ஆகஸ்ட் 2023 இல் வழங்கியுள்ளது.
  • இது இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகமானது தனது சமீபத்திய அறிக்கையில் இந்திய அரசாங்கத்திடமிருந்து நிதி பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தும் செயல்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் இராணுவத் தலையீடு அச்சுறுத்தல் காரணமாக நைஜர் நாட்டின் வான்வெளி பரப்பை மூடுவதாக அறிவித்துள்ளது.

  • மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு குழுவான ஈகோவாஸ், ஆகஸ்ட் 06 அன்று நள்ளிரவுக்குள், சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீண்டும் அவரது பதவியில் அமர்த்தப்படாவிட்டால் பலத்தை பயன்படுத்த நேரிடும் என்று எச்சரித்திருந்த சூழ்நிலையில், அண்டை நாடுகளின் இராணுவத் தலையீட்டை காரணம் காட்டி, நைஜர் நாட்டின் வான்வெளி பரப்பை மூடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • அந்நாட்டு அதிபர் திரு பாஸூம் ஜூலை 26 2023 அன்று தடுத்து வைக்கப்பட்டதை, தொடர்ந்து நாட்டின் ராணுவ தளபதியான ஜெனரல் அப்துரஹ்மானே தன்னை புதிய தலைவராகவும் அந்நாட்டின் அதிபராகவும் அறிவித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாகூரின் 82வது நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிக்கப்படுகிறது.

  • இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 82ஆவது நினைவு தினமானது ஆகஸ்ட் 06 அன்று வங்கதேசத்தில் அனுசரிக்கப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, தாகூர் தனது 80வது வயதில் ஆகஸ்ட் 07 ஆம் தேதி 1941ஆம் ஆண்டு இறந்தாலும் வங்கதேசத்தில், வங்காள நாட்காட்டியின் படி “ஸ்ரபன் 22ஆம் தேதி” அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.(அதாவது ஆகஸ்ட் 06)
  • குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் தனது இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்திய துணைக் கண்டத்தின்(விடுதலைக்கு முன்னிருந்த இந்தியா) கலாச்சாரத்தில், குறிப்பாக வங்காளத்தின் கலாச்சாரத்தில் மிக ஆழமான முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

“இந்திரதனுஷ் (ஐஎம்ஐ) 5.0 நோய்த்தடுப்பு” என்ற முன்னெடுப்பானது கோவை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.

  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு மிகவும் தீவிரப்படுத்தப்பட்ட பணியான இந்திரதனுஷ் (ஐஎம்ஐ) 5.0 என்ற நோய்த்தடுப்பு முன்னெடுப்பானது ஆகஸ்ட் 07 அன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. 
  • இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த முன்னெடுப்பானது வயது வந்தோருக்கான டெட்டனஸ் டிஃப்தீரியா(டிடி) என்பதன் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேசிய நோய்த்தடுப்பு குறிப்பு அட்டவணையில் தடுப்பூசிகளை தவறவிட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரமானது ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 (SD2.0) இன் கீழ் முக்கிய வளர்ச்சிக்கான இடமாக அடையாளம் கண்டுள்ளது.

  • மத்திய சுற்றுலா அமைச்சகமானது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ‘நைமிஷாரண்யா’ மற்றும் ‘பிரயாக்ராஜ்’ ஆகிய இடங்களை “ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 (SD2.0)” இன் கீழ் முக்கிய வளர்ச்சிக்கான இடங்களாக அடையாளம் கண்டுள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
  • நாட்டின் சுற்றுலா சுற்றுகளின் முன்னேற்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-2015 ஆம் நிதியாண்டில் மத்திய அரசாங்கமானது “ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை”(SDS) அறிமுகப்படுத்தியுள்ளதென்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட கருப்பொருள் சுற்றுகளின் 08 திட்டங்கள் இதன்கீழ் உள்ளன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கான ஊழியர்களை அரசுப் பணியில் உள்வாங்குதல் மசோதா 2023 ஆனது  நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • தெலுங்கானா மாநில சட்டப் பேரவையானது தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அரசு சேவையில் பணியாளர்களை உள்வாங்குதளுக்கான திருத்த மசோதா 2023 ஐ ஆகஸ்ட் 07 அன்று மாலை நிறைவேற்றியுள்ளது.
  • முன்னதாக அம்மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை ஒப்புதல் அளித்ததையடுத்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அஜய்குமார் சட்டசபையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மேலும் அம்மாநில போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியமனங்கள்

அதார் பூனாவாலா நிறுவனத்தின் நிதிச் சேவை மூலோபாய ஆலோசகராக கேகி மிஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மாபெரும் சைரஸ் பூனவல்லா குழுமத்தின், அதார் பூனாவாலாவின் கீழ் உள்ள அனைத்து முதன்மை மற்றும் துணை நிதிச் சேவை நிறுவனங்களின் “மூலோபாய ஆலோசகராக” கேகி மிஸ்திரியை நியமித்துள்ளதாக ஆகஸ்ட் 07 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • பல ஆண்டுகால முன்னனுபவம் கொண்ட இவர் இந்த நியமனத்திற்கு முன் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், துணைத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் சிறந்த மற்றும் மிகப்பெரிய உயிரித்தொழிநுட்பவியல் நிறுவனம் மற்றும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் நிறுவனத்தை சைரஸ் பூனவல்லா அமைப்பு 1966 ஆம் ஆண்டு நிறுவியது என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

விளையாட்டு செய்திகள்

லாஸ் கபோஸ் ஏடிபி 250 கோப்பையை ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் வென்றுள்ளார்.

  • புகழ்பெற்ற கிரேக்க டென்னிஸ் வீரரான Stefanos Tsitsipas ஆகஸ்ட் 05 அன்று இரவு லாஸ் காபோஸின் “ATP 250” பட்டத்தை அல்லது கோப்பையை வென்றுள்ளார்.
  • இவர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரின் என்ற வீரரை 6-3, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இந்த கோப்பையை கைப்பற்றியுள்ளார். இது அவரது வாழ்க்கையில் 10வது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் உலக பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற அந்தஸ்தை அதிதி பெற்றுள்ளார்.

  • ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தனிநபர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற அந்தஸ்தை அதிதி சுவாமி கடந்த ஆகஸ்ட் 05 அன்று பெற்றுள்ளார். 
  • இந்த இறுதி போட்டியில் 149-147 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா பெசெராவை தோற்கடித்து இதன் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பார்சிலோனா டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் அணி பிரிவில் பிரார்த்தனா தோம்பரே சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற மகளிருக்கான டென்னிஸ் போட்டி தொடரில் இரட்டையர் அணி பிரிவில் பிரார்த்தனா தோம்பரே சாம்பியன் பட்டத்தை ஆகஸ்ட் 06 அன்று வென்றுள்ளார்.
  • இவர் ரஷ்ய வீராங்கனை டிகோனோவாவுடன் இணைந்து, இந்த இறுதிச் சுற்றில் 3-6, 6-1, 10-7 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்சின் எஸ்டெல் மற்றும் லாட்வியாவின் டயானா ஜோடியை வீழ்த்தி இந்த பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நான்கு நாடுகளின் பாரா பேட்மிண்டன் தொடரில் கடம்-பகத் ஜோடியானது தங்கம் வென்றுள்ளது.

  • உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆடவர் இரட்டையர் ஜோடியான  சுகந்த் கதம் மற்றும் பிரமோத் பகத், இங்கிலாந்து நாட்டின் ஷெஃபீல்டு நகரில் உள்ள நான்கு நாடுகளின் கூட்டு பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் SL3 மற்றும் SL4 பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் கதம் மற்றும் பகத் ஜோடியானது 21-17 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் மற்றொரு இந்திய ஜோடியான மனோஜ் சர்க்கார் – தீப் ரஞ்சன் பிசோயி ஜோடியை வீழ்த்தி இந்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இரங்கல் செய்திகள்

போர்க்கப்பல் என்றழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகர் கதர் காலமானார்.

  • மக்களால் போர்க்கப்பல் என்றழைக்கப்பட்ட பிரபல தெலுங்கு பாடகர் கதர்(வயது 74) ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 06 2023 அன்று காலமானார். இவரின் இயற்பெயர் ஜி வித்தல் ராவ் என்பதாகும்.
  • 2011 ஆம் ஆண்டில் ஜெய் போலோ தெலுங்கானாவுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் “சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான” நந்தி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் கடந்த மாதம், “கதர் பிரஜா கட்சி” என்ற புதிய அரசியல்வாத கட்சியை தொடங்குவதாக அறிவித்தது இளைஞர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

முக்கிய தினம்

 தேசிய கைத்தறி தினம் 2023

  • கைத்தறி துறையை ஊக்குவிப்பதும், அத்தொழில் ஈடுபட்டுள்ள நெசவாளர் சமூகத்தின் முன்முயற்சிகள் மற்றும் அவர்களின் திறன்களை உலகரங்கில் அங்கீகரிப்பதும், இச்சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 07 ஆம் நாளானது தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • “நிலையான நாகரீகத்திற்கான கைத்தறி” (“Handlooms for Sustainable Fashion”) என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!