நடப்பு நிகழ்வுகள் – 15 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 15 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 15 ஆகஸ்ட் 2023நடப்பு நிகழ்வுகள் - 15 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 15 ஆகஸ்ட் 2023

 

தேசிய செய்திகள்

IMS நொய்டா ஒரு பூஜ்ஜிய-கழிவு(Zero-Waste) வளாகத்தைத் தொடங்கியுள்ளது.

  • இந்திய மாசுக் கட்டுப்பாட்டு சங்கம்(IPCA) மற்றும் நொய்டா மேலாண்மை ஆய்வுகள் நிறுவனமானது(IMS) இணைந்து பூஜ்ஜிய-கழிவு(Zero-Waste) வளாகத்தை ஆகஸ்ட் 2023 இல் தொடங்கியுள்ளது. 
  • இது திறமையான மறுசுழற்சி செயல்முறைகள், மூலப் பிரிப்பு மற்றும் கழிவுகளை முழுமையாக அகற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் மற்றும் குப்பைகளை அகற்ற ஏரோபின் இயந்திரத்தை நிறுவி அதனை பயன்படுத்தி 100% மறுசுழற்சியினை மேற்கொள்ளுவதை நோக்கமாக கொண்டு இந்த வளாகமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

பாரத பிரிவினையில் பயங்கர நினைவு நாளில் உயிர் இழந்தவர்களை தேசம் நினைவுக்கோரும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

  • 1947ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கடும் போராட்டங்கள் மற்றும் உயிர் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியாவில் ஆகஸ்ட் 14 2023 ஐ பிரிவினை பயங்கர நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய பிரதமர் மோடி ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினையின் கொடூர நினைவு தினம் அல்லது “விபஜன் விபிஷிகா ஸ்மிருதி திவாஸ்” ஆக அறிவித்துள்ளார். சமூகப் பிளவுகள், நல்லிணக்கமின்மை ஆகிய கொடிய விஷத்தை அகற்றி, சமூக நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் மனித அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுவதாக நமது பிரதமர் கூறியுள்ளார்.

சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாகும் வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் MakeMyTrip நிறுவனத்திற்கிடையே பகிர்மான ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும் இணையதள பயணத்திற்கான சேவைகளை வழங்கும் நிறுவனமான MakeMyTrip ஆனது, ஆகஸ்ட் 13 அன்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் ஒரு பகிர்மான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • அந்நிறுவனம் உருவாக்கிய “டிராவலர்ஸ் மேப் ஆஃப் இந்தியா” என்ற குறு தளத்தை(microsite) மேம்படுத்துவதையும் நாட்டில் உள்ள இடங்களைக் கண்டறிய பயணிகளுக்கு எளிதாக சேவைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த குறு தளமானது(microsite) மத்திய அரசாங்கத்தின் – DekhoApnaDesh – திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் தற்காலிக பிரதமராக அன்வார்-உல்-ஹக் கக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பாகிஸ்தான் நாட்டின் தற்காலிக பிரதமராக பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின்(BAP) செனட்டரான அன்வார்-உல்-ஹக் கக்கரை நியமிப்பதற்குறிய தீர்மானத்திற்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வி ஆகஸ்ட் 2023 இல் ஒப்புதல் அளித்துள்ளார். 
  • நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 12 2023 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சி மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதையடுத்து இந்த நியமனமானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். இவர் இதற்கு முன்பாக 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகளில் பலுசிஸ்தான் மாநில “அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக” சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேபாள மத்திய விவகாரத்துறை அமைச்சராக அனிதா ஷா பதவியேற்றுள்ளார்.

  • நேபாள அமைச்சரவை மறுசீரமைப்பில், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், அமன் லால்க்கு பதிலாக அனிதா தேவி ஷாவை மத்திய பொது நிர்வாகம் மற்றும் விவகாரங்கள்துறை அமைச்சராக ஆகஸ்ட் 14 2023 இல் நியமித்துள்ளார்.
  • இதன் மூலம் 11வது முறையாக அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். மேலும் தஹால் ஏற்கனவே ஆட்சிக்கு வந்த 8 மாதங்களுக்குள் 10 முறை அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார் என்பதும் இந்த நியமனம் மூலம் 11வது அமைச்சரவை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில செய்திகள்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக “திருச்சி” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  • திருச்சி மாநகராட்சியானது 2023 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கான விருதை மாண்பிமிகு மாநில முதல்வர் அவர்களின் சார்பில் திருச்சி மாநகராட்சியின் மேயர் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகும்.
  • மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது மாண்பிமிகு தமிழக முதல்வர் அவர்களால் இந்த விருதுகளானது வழங்கப்படுவதாகும்.

நாட்டின் மிகப்பெரிய – புதிய தகவல் தொழில்நுட்ப மையத்தை லக்னோவில்  உருவாக்க திட்டம்.

  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் புதிய மற்றும் நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளானது அம்மாநில முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது என ஆகஸ்ட் 2023 மாத அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • மாநில ராஜ்கிய நிர்மான் நிகம்(UPRNN) அமைப்பானது முக்கிய நகரமான கான்பூர் சாலையில் உள்ள அமௌசி மற்றும் நாடர்கஞ்ச் தொழில்துறை பகுதிகளில் கிட்டத்தட்ட 40 ஏக்கரில் ஐடி தொழில்நுட்ப பூங்கா மற்றும் மையம் மற்றும் 6.9 ஏக்கரில் சர்வதேச இன்குபேஷன் வசதி மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான வரைபடமானது ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

  • எல்லையோர மற்றும் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாக கொண்டு பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதில் கடற்படைக்கு தேவையான புதியவகையான பிரிகேடியர் போர்கப்பல்களும், ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான ஆளில்லா விமானங்களும் எல்லையோரங்களில் நிறுவப்படுவதற்கான திட்டமானது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

லடாக்கில் விழிப்புணர்வு மற்றும் தூய்மைக்கான முன்னெடுப்பானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • யூனியன் பிரதேசமான லடாக்கில், அம்மாநில சுற்றுலாத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (RD&PRD), ரூட்ஸ் லடாக் அமைப்பு மற்றும் மாநில வனவிலங்குத் துறையுடன் இணைந்து “என் மண் என் நாடு” பிரச்சாரத்தின் கீழ் ஒரு “விழிப்புணர்வு மற்றும் தூய்மை இயக்கத்திற்கான” ஒரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
  • காடுகள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாநில சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை மேற்கொள்ளுதல் மற்றும் மனிதர்கள் – வனவிலங்குகளின் மோதலின் கடுமையான பிரச்சினையையும் பற்றி விழிப்புணர்வை மேற்கொள்ளுதலை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளதாகும்.

CRPF 166 பட்டாலியன் ஆனது வண்ணமயமான வாகன திரங்கா பேரணியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

  • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், CRPF 166 பட்டாலியன் படையானது ஆகஸ்ட் 14 2023 அன்று ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் சுற்றுவட்டார பகுதியில் வண்ணமயமான வாகன திரங்கா என்ற முன்னெடுப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
  • JKP, CRPF, RPF, GRPF, PRI ஆகிய அமைப்பு மற்றும் படை வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான உள்ளூர்வாசிகள் இந்த திரங்கா பேரணியில் பங்கேற்பதன் மூலம் அப்பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவதை நோக்கமாக கொண்டு இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Srinagar: CRPF personnel ride motorcycles during ‘Tiranga Rally’ to celebrate ‘Har Ghar Tiranga’ as part of ‘Azadi ka Amrit Mahaotsav’ celebrations for the 75th year of Independence, at Lal Chowk in Srinagar, Thursday, Aug. 11, 2022. (PTI Photo/S. Irfan)(PTI08_11_2022_000209B)

அறிவார்ந்த மாபெரும் தேசிய ஊடக மாநாடு 2023 ஆனது புது தில்லியில் நடைபெற்றுள்ளது.

  • மின்னணு மற்றும் அச்சு ஊடக சங்கங்களின் சார்பாக சிறப்புமிக்க நிகழ்வான மதிப்பிற்குரிய ராஷ்ட்ரிய நவரத்னா விருதுகள் 2023 மற்றும் தேசிய ஊடக மாநாடானது புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் ஆகஸ்ட் 14 2023 இல் நடைபெற்றுள்ளது.
  • இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், இந்த புகழ்பெற்ற விருதுகளுக்கான பரிந்துரைகளில் உள்ள சிறந்த நபர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ராஷ்ட்ரிய நவரத்னா விருதுகளானது வழங்கி கௌரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான முதல் விண்வெளி திட்டமான ஆதித்யா-எல்1 ஐ அடுத்த மாதம் ஏவ திட்டம்.

  • சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி செயற்கைக்கோளான “ஆதித்யா-எல் 1”-ஐ செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • பெங்களூரு யு ஆர் ராவ் செயற்கைக்கோள் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளானது இஸ்ரோவின் முதன்மையான ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவ உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளதாகும். இந்த விண்கலமானது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் “லாக்ரேஞ்ச் புள்ளி – எல் 1” ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் வைக்கப்பட்டு சூரியனை முழுவதுமாக ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டு செலுத்தப்பட உள்ளதாகும்.

விருதுகள்

அலிகார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு “ராஷ்ட்ரிய கௌரவ் விருதானது” வழங்கப்பட்டுள்ளது.

  • புது தில்லியில் “தேசிய ஒருமைப்பாடு மற்றும்  பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை பேராசிரியரான டாக்டர் பல்லவ் விஷ்ணுவுக்கு மதிப்புமிக்க 2023 ஆம் ஆண்டிற்கான ‘ராஷ்ட்ரிய கௌரவ் விருது’ ஆனது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா இன்டர்நேஷனல் ஃப்ரெண்ட்ஷிப் சொசைட்டி(IIFS) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பால் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதை இவருக்கு ஸ்ரீமதி. மீரா குமார்(மக்களவை முன்னாள் சபாநாயகர்) இவரின்  சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த சேவைக்காக வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

ஜானிக் சின்னர் தனது முதல் கனடிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற கனடா ஓபன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி 6-4 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலிய வீரரான ஜானிக் சின்னர் தனது “முதல் மாஸ்டர்ஸ் 1000 பட்டத்தை” வென்றுள்ளார்.
  • 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு மியாமி ஓபன் தொடரில் ரன்னர்-அப் முயற்சிகளுக்குப் பிறகு தனது மூன்றாவது மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியில் தோன்றிய இவர் கடும் போராட்டத்திற்கு பின் இந்த தொடரை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

பாகிஸ்தான் சுதந்திர தினம் 2023

  • ஆகஸ்ட் 1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியானது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் நாளானது பாகிஸ்தான் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது.
  • முகமது அலி ஜின்னாவின் தலைமையில் அகில இந்திய முஸ்லீம் லீக் இயக்கம் நடத்தப்பட்டு பாகிஸ்தான் நாட்டிற்கு விடுதலை பெற்று தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய சுதந்திர தினம் 2023

  • கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக ஆங்கிலேய ஆட்சியில் சிக்கி தவிக்கும் இந்திய நாட்டை அப்பிடியிலிருந்து விலகி சுதந்திர காற்றை சுவாசிக்கும் முதல் நாளான ஆகஸ்ட் 15 ஆம் நாளானது முக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
  • தனது சுதந்திரப் பயணத்தைத் தொடங்கி ஜனநாயக, குடியரசு மற்றும்  இறையாண்மை கொண்ட நாடாக மாறிய இந்த நாளை போற்றுவதையும் இந்த நாளை பெறுவதற்கு சிந்திய பல்வேறு தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!