Work From Home ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிமுகம்!

0
Work From Home ஊழியர்கள் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிமுகம்!
Work From Home ஊழியர்கள் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிமுகம்!
Work From Home ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிமுகம்!

நாடு முழுவதும் IT நிறுவனங்கள் முதல் தொடக்க நிறுவனங்கள் வரை, அனைவரும் ‘WORK FROM HOME’ முறையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் Work From Home ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதிய விதிகள்:

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. மேலும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘WORK FROM HOME’ முறையை தொடர்ந்து வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக வரும் சூழலில், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும்படி அழைத்து வருகின்றன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் TCS, HCL, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போது, ஹைப்ரிட் மாடல் வேலைகளைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில் தான், கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆய்வு முடிவில், 82 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதை விட வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்புகின்றனர் என தெரியவந்தது. இதனையடுத்து தான், நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதாரா மண்டலங்களிலும் (SEZs) ஒரே மாதிரியான work form home கொள்கையைக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொழில்துறையினர் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தற்போது Work From Home -க்கான 43A யை சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006 இல் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

Work From Home க்கான புதிய விதிகள்:

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ஊழியர்கள் ஓராண்டிற்கு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் சிறப்புப்பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் இதனை மேலும் அந்தக்காலத்தை நீட்டிப்பு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக மொத்த ஊழியர்களின் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறையை ஓராண்டிற்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – சிக்கலில் கல்வித்துறை!

தற்போது மத்திய வர்த்தகத்துறை அறிவித்துள்ள புதிய விதிகள் IT/ ITeS SEZ units, தற்காலிக ஊழியர்கள், பயணம் செய்யும் மற்றும் வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஏற்கனவே வீட்டில் இருந்தே பணிபுரியும் SEZ யூனிட்களைப் பொறுத்தமட்டில், அனுமதி பெறுவதற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பு ஆகிய இரண்டையும் வழங்க வேண்டும். ஒரு ஊழியருக்கு வழங்கப்பட்ட அனுமதியுடன் உபகரணங்களை வெளியே எடுப்பதற்கான அனுமதியை இணை- டெர்மினஸ் என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், சாண்டா குரூஸ் (மகாராஷ்டிரா), கொச்சின் (கேரளா), காண்ட்லா மற்றும் சூரத் (குஜராத்), சென்னை (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஃபால்டா (மேற்கு வங்கம்) மற்றும் நொய்டா உட்பட 8 SEZகள் தற்போது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!