ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தரத்தை உயர்த்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தரத்தை உயர்த்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தரத்தை உயர்த்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. தரத்தை உயர்த்த தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் மதுரை – கச்சிகுடாவிற்கு செல்லும் ரயில் சேவை பயணிகளின் வசதிக்காக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் மக்கள் பலர் ரயில் சேவையை நம்பி இருக்கின்றனர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணத்தை அதிகம் விரும்பி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக தெற்கு ரயில்வேயின் சில பகுதிகளில் ரயில் சேவையை மாற்றி வருகிறது. அந்த வகையில் மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவிற்கு வாராந்திர அடிப்படையில் இயங்கி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.. காத்திருப்பு நேரம் அதிகரிப்பு – காரணம் இதுவா?

இந்நிலையில் அந்த ரயிலில் மொத்த பயண நேரம் 24 மணி நேரமாக இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அதனை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம் எக்ஸ்பிரஸ் ரயிலான மதுரை – காச்சிகுடா ரயிலை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக தரம் உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் கச்சிகுடா – மதுரை – கச்சிகுடா வாராந்திர ரயிலின் எண் 22715/22716 ஆக மாற்றப்பட்டுள்ளது.மாற்றப்பட்ட சூப்பர் பாஸ்ட் ரயிலின் முதல் சேவை கச்சிகுடாவிலிருந்து 15.07.2023 தொடங்கி, 16.07.2023 (ஞாயிற்றுக்கிழமை) மதுரைக்கு வந்து சேர்ந்து பின் மதுரையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு கச்சிகுடா செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!