தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளிப்போர் கவனத்திற்கு – அறிக்கை வெளியீடு!

0
தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளிப்போர் கவனத்திற்கு - அறிக்கை வெளியீடு!
தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளிப்போர் கவனத்திற்கு - அறிக்கை வெளியீடு!
தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளிப்போர் கவனத்திற்கு – அறிக்கை வெளியீடு!

தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனுக்களை அளிக்கும் பொதுமக்கள் எவ்விதமான மனுக்களையும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம் என்றும், அது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவு:

தேர்தல் வாக்குறுதியின் போது மக்களின் குறைகளை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், இந்த பிரச்சனைகள் 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிப்பவர்களுக்கு அரசு இலவச வீடு வழங்குவதாகவும் வதந்திகள் எழுந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு வழங்க தலைமை செயலகத்தில் கூடி விடுகின்றனர்.

திருப்பதி இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இது போன்ற சூழ்நிலைகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் உள்ளனர். முதல்வரின் தனிப்பிரிவில் நேரடியாக மட்டுமல்லாமல் தபால் மற்றும் இணையம் மூலமாகவும் மனுக்கள் பெறப்படுகின்றது. எந்த வழியில் மனுக்கள் பெறப்பட்டாலும் ஒரே மாதிரியாக தான் நடைமுறை படுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும்,மக்கள் இதற்காக இணைய வழி சேவையை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் குறிப்பிட்ட படிவங்களில் தான் கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும் என்று வதந்திகள் பரவி வருகிறது. இவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து அளித்தாலே போதும் என்று தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!