DC vs RR Live Score – டெல்லி கேபிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

0
DC vs RR Live Score - டெல்லி கேபிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
DC vs RR Live Score - டெல்லி கேபிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
DC vs RR Live Score – டெல்லி கேபிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்தது. அதனை எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

DC vs RR LIVE Updates:
  • 20வது ஓவர் – ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனால் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. களத்தில் சஞ்சு சாம்சன் 70 ரன்கள் மற்றும் தப்ரைஸ் சம்சி 2 ரன்கள் உள்ளனர்.
  • 15வது ஓவர் – ராஜஸ்தான் அணி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சஞ்சு சாம்சன் 41 (34) ராகுல் தேவாடியா 4 (8) களத்தில் உள்ளனர். வெற்றி பெற 30 பந்துகளில் 73 ரன்கள் தேவையாக உள்ளது. தேவையான ரன் ரேட் அதிகமாக உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
  • 11.5வது ஓவர் – ரியான் பராக் (2) அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் போல்டானார்
  • 11வது ஓவர் – ராஜஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியல் பராக் உள்ளனர்.
  • 10.2வது ஓவர் – மஹிபால் லோமர் 19 ரன்களில் (24 பந்துகள், 1 சிக்ஸர்) ரபாடா பந்தில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
  • 9வது ஓவர் – இடைவேளை விடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 43/3 என்ற நிலையில் உள்ளது. வெற்றி பெற இன்னும் 66 பந்துகளில் 112 ரன்கள் தேவை.
  • 8வது ஓவர் – ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு தற்போது 34 ரன்கள் எடுத்துள்ளது. சாம்சன் மற்றும் மஹிபால் லோமரார் ஆகியோர் களத்தில் உள்ளனர். வெற்றி பெற இன்னும் 78 பந்துகளில் 121 ரன்கள் தேவை.
  • 6வது ஓவர் – பவர் பிளே முடிவில் 21/3 என்ற பரிதாப தத்தளித்துக் கொண்டு உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். தற்போது களத்தில் சஞ்சு சாம்சன் 5 (11) மற்றும் மஹிபால் லோமர் 3 (8) உள்ளனர்.
  • 4.2வது ஓவர் – அஸ்வின் பந்தில் மில்லர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ராஜஸ்தான் அணி 17/3 என்ற நிலையில் தத்தளித்து வருகிறது.
  • 3வது ஓவர் – தொடர் விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி நிதானமாகவே விளையாடி வருகிறது. 3 ஓவர்களின் முடிவில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் சாம்சன் மற்றும் மில்லர் உள்ளனர்.
  • 1.1வது ஓவர் – அன்ரிச் நோர்டியா பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
  • 1வது ஓவர் – லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன்னில் அவேஷ் கான் பந்து வீச்சில் ரிஷாப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி 6 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
155 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்
  • 20வது ஓவர் – டெல்லி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்துள்ளது. களத்தில் அஸ்வின் (6) மற்றும் லலித் யாதவ் (14) உள்ளனர்.
  • 18.2 வது ஓவர் – அக்சர் படேல் (12 ரன்கள் 7 பந்துகள் 1 சிக்ஸர்) சேத்தன் சகாரியா பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
  • 18வது ஓவர் – டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது களத்தில் லலித் யாதவ் 10 (11) மற்றும் அக்சர் படேல் 6(5) ரண்களுடன் விளையாடிக் கொண்டுள்ளனர்.
  • 16.3வது ஓவர் – ஹெட்மயர் 28 ரன்கள் (16 பந்துகள், 5 பவுண்டரி) எடுத்த நிலையில் முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்து வீச்சில் சேத்தன் சகாரியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
  • 15 ஓவர் – தற்போது ஹெட்மேயர் 15 ரன்கள் (10 பந்துகள், 2 பவுண்டரி) மற்றும் லலித் யாதவ் (2) காலத்தில் உள்ளனர். டெல்லி அணி 15 ஒவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை குவித்துள்ளது
  • 13.2 ஓவர் – ஷ்ரேயஸ் ஐயர் 43 ரன்களில் (32 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்) ராகுல் திவாதியா பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். தற்போது 90 ரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி சிக்கலில் தடுமாறி வருகிறது.
  • 11.4வது ஓவர் – கேப்டன் ரிஷாப் பண்ட 24 (24 பந்துகள், 2 பவுண்டரி) எடுத்த நிலையில் முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்து வீச்சில் போல்டானார். தற்போது டெல்லி அணி 84/3 என்ற நிலையில் உள்ளது.
  • 11வது ஓவர் – டெல்லி னையின் ஷ்ரேயஸ் ஐயர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி வருகிறார். தற்போது டெல்லி அணி 79 ரங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 38 ரன்கள் (25), ரிஷாப் பந்த் 21 (21) ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
  • 9வது ஓவர் – டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டர்கள் நிதான பேட்டிங்கையே கையாளுகின்றனர். 9 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி தற்போது 56/2என்ற நிலையில் உள்ளது.
  • 8வது ஓவர் – தற்போது 8 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரிஷாப் பண்ட மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் ரன் மலை பொழிவது எப்போது என ற ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
  • 6வது ஓவர் – பவர் பிளே முடிவில் டெல்லி அணி 36 ரன்களை குவித்துள்ளது. 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தற்போது ரிஷாப் பண்ட (10 ரன்கள்) மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் (13 ரன்கள்) களத்தில் உள்ளனர். விரைவில் அதிரடி பேட்டிங்கை தொடங்குவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  • 4.1வது ஓவர் – பிரிதிவி ஷா 10 ரன்களில் (12 பந்துகள்) சேத்தன் சகாரியா பந்து வீச்சில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் டெல்லி அணி தடுமாறி வருகிறது. தற்போது டெல்லி அணி 21-2 என்ற நிலையில் உள்ளது. களத்தில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட உள்ளனர்.
  • 3.1வது ஓவர் – கார்த்திக் தியாகி பந்து வீச்சில் ஷிகர் தவான் 8 ரன்களில் (8 பந்துகள், 1 பவுண்டரி) போல்டானார். தற்போது டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் பிரிதிவி ஷா 10 ரங்களுடன் உள்ளார்.
  • 1வது ஓவர் – டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரிதிவி ஷா களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரின் முடிவில் ஷிகர் தவான் 2 ரன்கள், பிரிதிவி ஷா 4 ரன்கள் எடுத்துள்ளனர். டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!