PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம்!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம்!

EPFO அமைப்பு சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அனைத்து பிஎப் வாடிக்கையாளர்களும் தங்களது ஈபிஎப் கணக்கில் இ -நாமினேஷன் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்பு என்பது கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும் . இது வரி இல்லாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது முதுமை காலத்தில் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு வளரும் நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலர் பயன் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த EPFO அமைப்பு மோசடி கும்பல்களிடம் இருந்து உறுப்பினர்கள் தங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது பற்றிய தகவலை, அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து வருகிறது. அதாவது உறுப்பினர்களின் PF நம்பர், கணக்கு எண், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த ஒரு ஆவணத்தையும் PF அமைப்பு போன் கால் வாயிலாகவோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக கேட்காது.

ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

எனவே இந்த விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டு உள்ளது. இதை தொடர்ந்து EPF உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் ஒரு நாமினியை தேர்ந்தெடுப்பது கட்டாயம் என EPFO அமைப்பு அறிவித்துள்ளது. EPFO உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், கணக்கின் நாமினி காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இதற்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். நாமினி இல்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசு இந்தத் தொகையைப் பெறலாம். இந்நிலையில் உறுப்பினர்கள் அனைவரும் நாமினியை தேர்ந்தெடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் முன்னதாக நாமினியை தேர்ந்தெடுத்தவர்கள், புதிய நாமினியை அப்டேட் செய்ய வேண்டும், அதற்கான வசதியும் உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும் ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு செய்யலாம் மற்றும் புதிய நாமினியை அப்டேட் செய்யவும் முடியும். நாமினி தேர்வு செய்ய UAN நம்பர் அவசியம் ஆகும். PF உறுப்பினர்கள் EDLI (தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீடு) திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரையில் பயன்பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் தொகை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். எனவே PF உறுப்பினர்கள் தங்களது நாமினியை அப்டேட் செய்வது மிக கட்டாயம் ஆகும். உறுப்பினர் நாமினியை அப்டேட் செய்யாவிட்டால் ரூ.7 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!