TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தயாராவது எப்படி? முழு விவரம்!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தயாராவது எப்படி? முழு விவரம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தயாராவது எப்படி? முழு விவரம்!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தயாராவது எப்படி? முழு விவரம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A , குரூப் 3, குரூப் 4 என பல்வேறு வகையான போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

TNPSC Group 4:

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை வழங்கப்பட்டது. அறிவிப்பின்படி, இந்த தேர்வுக்கு மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும். அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

தேர்வுக்கு எப்படி படிப்பது?
  • குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • தமிழ் மொழிப்பாடத்திற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துக் கொள்ள வேண்டும், முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும், தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படித்து முடித்து விடுங்கள். பின்னர் 6,7,8 தமிழ் புத்தகங்களை படித்துக் கொள்ளுங்கள்.
  • கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

  • பொது அறிவுப் பகுதியில் 10 கேள்விகள் வரை பள்ளி புத்தகங்களை தாண்டி வெளியில் இருந்து கேட்கப்படலாம். ஆனால் அவை பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களாக இருக்க வாய்ப்புள்ளது.
  • புவியியல் படிக்கும் போது இந்திய வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படித்துக் கொண்டால், உங்களுக்கு எப்போதும் மறக்காது.
  • நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும், செய்தித்தாள்களை படிக்கும் போது தேவையற்ற செய்திகளை படிக்காமல், சிலபஸூக்கு ஏற்றவாறு படித்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!