TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியீடு!

தமிழகத்தில் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதாவது 120 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2A:

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதில் முதல் கட்டமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2, 2A தேர்வின் முதல் நிலைத்தேர்வு கடந்த 21ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வை எழுத முடியும். அதாவது நடைபெற்று முடிவடைந்த தேர்வில் பொது அறிவு பகுதிகள் மட்டும் கடினமாக உள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளது. குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் அதாவது (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

5529 பணியிடங்களுக்கு 55000 க்கும் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது சுமார் 60,000 பேர் வரை அல்லது அதற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதிப்பெண் அடிப்படையில் பொது பிரிவினருக்கான கட் ஆப் 145 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 140 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 135 – 140 வரையிலும், SC, SCA பிரிவினருக்கு 132-135 வரையிலும், ST பிரிவினருக்கு 130 க்கும் மேலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை குறையலாம். ஆனால் 120 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வு எழுத தயாராகலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!