TN TET ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

0
TN TET ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு கல்வித் தகுதி, வயது, தேர்வு முறை, பாடத்திட்டம் உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதில் இரண்டு தாள்களாக தேர்வு நடைபெறும். இதன் முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு நடத்தப்படுகிறது. அடுத்ததாக இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்காக நடத்தப்படுகிறது.

இத்தேர்வு எழுத குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு உச்ச வரம்பு ஏதும் கிடையாது. இதில் முதல் தாள் எழுத நினைப்பவர்கள் 12ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பையும் முடித்தவராக இருக்க வேண்டும். இதே போல இரண்டாம் தாள் எழுத நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதில் இரண்டாம் தாள் எழுதுபவர்கள் முதல் தாளையும் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

இதற்கு விண்ணப்பிக்க https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணையதள முகவரி சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினராக இருப்பின் ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்குரிய பாடத்திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் 150 வினாக்கள் கேட்கப்படுகிறது. அதன்படி 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது.

1. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் – 6 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

2. மொழிப்பாடம் – சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

3. ஆங்கிலம் – மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

4. கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் – கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

இப்போது ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்குரிய பாடத்திட்டத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் – 11 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

2. மொழிப்பாடம் – சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

3. ஆங்கிலம் – மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

4. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!