TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ!

0
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ!
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ!

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத நினைக்கும் விண்ணப்பித்தார்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பித்து பயன் பெறவும். மேலும், இந்த தேர்விற்கான பாட திட்டங்கள் குறித்தான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வினை நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தகுதி தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். தற்போது இந்த தேர்வு குறித்தான அனைத்து விளக்கத்தையும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது. அதாவது முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம்.

இரண்டாம் தாளை பி.எட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். பி.எட் படித்தவர்கள் முதல் தாளை கூட எழுதிக்கொள்ளலாம். இந்த தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் D.T.Ed அல்லது B.Ed படித்திருக்க வேண்டும். மேலும், 18 வயது பூர்த்தி செய்தவர்கள் அனைவருமே இந்த தேர்வினை எழுதலாம். தற்போது ஒவ்வொரு தாளுக்கும் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்வி கேட்பார்கள் என்பதை பார்க்கலாம்.

முதல் தாள்: முதல் தாளில் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய ஒவ்வொன்றிலும் இருந்து 30 கேள்விகளும், கேட்கப்படும். தற்போது முதல் தாளிற்கான பாட திட்டங்களை பார்க்கலாம்.

தனிநபர் கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைவான வட்டியில் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள்: முதல் தாளை போல இதிலும் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு பகுதியில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும். தற்போது இரண்டாவது தாளிற்கான பாட திட்டங்களை பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!

விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளவும். மேலும், விருப்பமுள்ள தேர்வாளர்கள் பொதுப் பிரிவினராக இருந்தால் ரூ. 500ம், SC, SCA, ST மற்றும் மாற்று திறனாளியாக இருந்தால் ரூ.250 செலுத்த வேண்டும் மற்றும் ஏப்ரல் 13 ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விண்ணப்பங்களை அறிய விரும்பினால் http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்கிற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துக்கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!