TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!

0
TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!
TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!
TN MRB ரூ.62,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டும்!

தமிழகத்தில் காலியாக உள்ள 209 டார்க் ரூம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 5 ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், உடனடியாக அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று, விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் டார்க் ரூம் உதவியாளர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TN-MRB அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த பணியில் 209 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் Physics, chemistry, Botany, Zoology ஆகிய பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் Dark Room Assistant (கதிரியக்க உதவியாளர் சான்றிதழ்) பயிற்சியை முடித்திருக்க வேண்டும்.

Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!

மேலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50 க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது வரம்பில்லை. மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Dark Room Assistant சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், Dark Room Assistant சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும்.

TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின் படி இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / மாற்றுத்திறனாளிகள் , அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mrb.tn.gov.in என்ற பக்கத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டோ மற்றும் கையொப்பங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!