TN TET விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்டு 25 முதல் தேர்வுகள்? முழு விபரம் இதோ!

0
TN TET விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - ஆகஸ்டு 25 முதல் தேர்வுகள்? முழு விபரம் இதோ!
TN TET விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - ஆகஸ்டு 25 முதல் தேர்வுகள்? முழு விபரம் இதோ!
TN TET விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்டு 25 முதல் தேர்வுகள்? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்டு மாதம் 25ம் தேதி முதல் TET தேர்வுகள் துவங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

TET தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுகளானது தமிழகத்தில் காணப்பட்டு வந்த கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் TNPSC உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளையும் நடத்துவதற்கு தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடத்தப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்புகள் வெளியானது. தொடர்ந்து TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரைக்கும் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவதற்கு சுமார் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதை தொடர்ந்து TET விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்ய விரும்புபவர்களுக்கு ஜூலை 11ம் தேதி முதல் 16ம் தேதி கால அவகாசம் அளிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் இன்று (ஜூலை 7) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

இந்த நிலையில் தற்போது ஆகஸ்டு மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, TET தேர்வின் முதல் தாள் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரைக்கும் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், TET தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ஆகியவற்றை வழங்குவது தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!