TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!

0
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – 50,000 பேர் மீண்டும் அலுவலகம் வரவழைப்பு! மாஸ்டர் பிளான்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் (TCS) சுமார் 50,000 ஊழியர்களின் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை முடித்து அலுவலகம் வரவழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WFH அப்டேட்

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பேரலை தொற்று நிமித்தமாக பல்வேறு துறைகளும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் WFH முறையை அமல்படுத்தியது. இப்போது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அலுவலக ஊழியர்கள் பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா பேரலைத்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் வேளையில் மக்கள் மீண்டுமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைப்பது எப்படி?

இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், கடந்த 2 வருடங்களாக வீட்டிலிருந்து பணிபுரிந்து விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதால் ஒரு சில ஊழியர்கள் தங்களது வேலைகளை ராஜினாமா செய்து, வேறு வேலையில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது IT நிறுவன நிர்வாகிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாக அமைந்திருக்கிறது. இப்படி இருக்க டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் (TCS) WFH வேலை முறை பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்போது வரை, சுமார் 5.92 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் 95 சதவீதம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் வாரம் துவங்கி, உயர் பதவிகளில் இருக்கும் 50000 ஊழியர்களை அலுவலகம் வரவழைத்துள்ளது. இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து தங்களது வேலைகளை செய்ய முடியும். அடுத்த கட்டமாக TCS நிறுவனம் 25-25 என்ற ஒர்க் மாடலை தனது ஊழியர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 7வது ஊதிய குழுவின் பரிந்துரை!

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் குறைந்தது 20% ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கும். மற்ற 80 சதவீத ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணி புரியும் வாய்ப்பை வழங்க TCS முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 x 25 x 25 மாடலின் கீழ் வரும் 2025ம் ஆண்டுக்குள் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்கள் என்றும் மொத்த பணி நேரத்தில் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் செலவழிப்பார்கள் என்றும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!