SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! EMIயும் அதிகரிக்கும்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! EMIயும் அதிகரிக்கும்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! EMIயும் அதிகரிக்கும்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! EMIயும் அதிகரிக்கும்!

இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்வசம் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியானது BPLR மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்கிறது. மேலும் நாட்டில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். மேலும் தற்போது உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.

தமிழக பத்திரப்பதிவு துறையில் வரப்போகும் புதிய மாற்றம் – இனி அந்த விஷயத்துக்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் பேட்டி!

இதனால் வங்கிகளும் தங்களின் கடன் சுமையை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த வகையில் தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் 35- 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனால் தற்போது பல்வேறு வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Benchmark Prime Lending Rate-யின் (BPLR) தற்போதைய வட்டி விகிதம் 12.75 ஆக உள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது இந்த வட்டி விகிதத்தை 70 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 13.45 ஆக அதிகரித்துள்ளது. இதனால் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு EMI அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது 0.7 சதவீதம் அதிகரித்து 8.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடன்ச்சுமை அதிகரிக்கக்கூடும். மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கி தனது Benchmark Prime Lending Rate மற்றும் BASE Rate உள்ளிட்டவற்றின் விகிதங்களை உயர்த்தியதை தொடர்ந்து நாட்டில் மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!