Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – இனி பணம் அனுப்புவது ஈஸி!

0
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு - இனி பணம் அனுப்புவது ஈஸி!
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு - இனி பணம் அனுப்புவது ஈஸி!
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – இனி பணம் அனுப்புவது ஈஸி!

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் இருந்து பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் பரிவர்த்தனை செய்யலாம் என்ற அறிவிப்பை தபால் துறை வெளியிட்டு உள்ளது. அதை தொடர்ந்து இந்த வசதியை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் மே 18ம் தேதி முதல் ஆரம்பம் ஆகியுள்ளது.

புது வசதிகள்:

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தபால் அலுவலக கணக்குதாரர்களும் நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகிய மின்னணு பணப் பரிவர்த்தனை வசதிகளை பயன்படுத்தலாம் என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நேரடி வரி விதிப்புகள் வாரியம் கடந்த மே 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு மே 18 ஆம் தேதி முதல் நெஃப்ட் பரிவர்த்தனை வசதியையும், மே 31 ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதியையும் பயன்படுத்த முடியும் என தபால் துறை தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த இரு வசதிகளால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்குதாரர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்ப முடியும். அதேபோல், மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் வாயிலாக தபால் அலுவலக சேமிப்பு கணக்குக்கு பணம் அனுப்ப முடியும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தபால் அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டும் படியும் தபால் துறை உத்தரவிட்டுள்ளது.

NEFT மற்றும் RTGS:

NEFT என்பது National Electronic Funds Transfer ஆகும். RTGS என்பது Real Time Gross Settlement ஆகும். இரண்டுமே மின்னணு பணப் பரிவர்த்தனை முறையாகும்.

TNPSC போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!

ஆண்டு முழுவதும் எல்லா நாட்களும் எல்லா நேரமும் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் வாயிலாக பணம் அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் எந்த தடையும் இல்லாமல் பணம் அனுப்பலாம்.

NEFT சேவை கட்டணம்:

வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை பரிவர்த்தனை செய்யும் போது ரூ.2.50 சேவைக் கட்டணம் மற்றும் GST வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மற்றும் GST வரி பிடித்தம் செய்யப்படும். ரூ.1 லட்சத்திற்கு மேல் 2 லட்சத்திற்குள் உள்ள பரிவர்த்தனைக்கு ரூ.15 மற்றும் GST வரி, ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 மற்றும் GST வரி வசூல் செய்யப்படும்.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச பரிவர்த்தனை வரம்பு:

NEFT பரிவர்த்தனையில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரையில் செய்து கொள்ள முடியும். இ-பேங்கிங் மற்றும் எம்-பேங்கிங் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் நாளொன்றுக்கு 5 பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்..

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!