Post Office ல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வரிவிலக்கு சலுகைகள் குறித்த விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அத்தகைய திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வரிவிலக்கு சலுகை
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித்தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது. மேலும், முதலீடு செய்யும் பணம் அப்படியே இருக்கும், வட்டி வாயிலாக வருமானமும் கூடுதலாக கிடைக்கும்.
அத்துடன் தேசிய ஓய்வூதிய அமைப்பு, சுகன்யா சம்ரிதி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, தபால் அலுவலக வைப்புத்தொகை, தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டக் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள், கிசான் விகாஸ் பத்ரா ஆகிய சேமிப்பு திட்டங்களில் வருமான வரிச் சட்டத்தின் 80 C இன் முதலீட்டு தொகையில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் PPF மீதான வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் – முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தில் ரிட்டயர்மென்ட் கார்பஸில் இருந்து வரும் வருமானம் மற்றும் மொத்த தொகை மாற்றங்களுக்கு வரி இல்லை. அதனை தொடர்ந்து தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வருமான வரிச் சட்டத்தின் ரூ. 10,000 விலக்குகளைத் தவிர, வைப்பாளர்கள் ஒற்றைக் கணக்குகளில் ரூ. 3,500 வரை ஈட்டப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படும். அதே போல மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ. 1.5 லட்சம் u/s 80C வரை வரி-பயன்களை பெறலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்