TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் – முக்கிய அறிவிப்பு!

0
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் முக்கியமாக கருதப்பட்டு வரும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 22) TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக எந்த வித போட்டி தேர்வுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. பின்னர், தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த காரணத்தால் ஒவ்வொரு போட்டி தேர்வு குறித்த அறிவிப்பும் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் 21ம் தேதி TNPSC குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. Deputy Superintendent of Police, Assistant Commissioner உள்ளிட்ட 5 பதவிகளுக்கு மொத்தமாக 92 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

குறைந்தபட்சமாக சம்பளம் 56100 முதல் – 205700 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிகளுக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Preliminary தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்ததாக Mains தேர்வுக்கு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற இருக்கும் முக்கிய தேர்வாக இது கருதப்படுவதால் தேர்வர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா விசாவை பெற வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!

Exams Daily Mobile App Download

கடந்த மாதம் 21ம் தேதி இந்த தேர்விற்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில், நாளையே (ஆகஸ்ட் 22) விண்ணப்பிக்க இறுதி நாள் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருக்கும் தேர்வர்கள் கால தாமதம் செய்யாமல் உடனடியாக தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்தனையும் தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான Admit கார்டு குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!