Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.5000 வரை வருமானம் தரும் சேமிப்பு திட்டம்!
அஞ்சலகங்கள் மக்களுக்கு உதவும் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 வரை வருமானமாக பெறலாம்.
MIS சேமிப்பு திட்டம்:
அஞ்சலகங்கள் அனைத்து தரப்பு மக்களும் சேமிக்க கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. அதனால் முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு லாபத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் என்பது சந்தேகமே. பாதுகாப்பான ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் கை கொடுக்கும்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் எதிர்காலத்தில் வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது. இதில் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். மேலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டுதோறும் 6.6 சதவீத வட்டி வழங்கப்படும். ஆனால் ஜாயிண்ட் அக்கவுண்டில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், 6.6 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படும் . இதில் தனிநபர் கணக்கை பொருத்தவரையில் மாதந்தோறும் ரூ.2,475 என்ற வகையில் வருமானம் கிடைக்கும்.
அதே கூட்டு கணக்கில் மாதம் ரூ.5000 வரை மாதந்தோறும் வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கூட சேரலாம். மாதாந்திர வருமான கணக்கு தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அஞ்சல கணக்கு திறந்திருக்க வேண்டும். பிறகு ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ, முகவரி சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டத்தில் சேரலாம். இந்த சேமிப்பு திட்டம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்