LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – சிலிண்டர் மானியம் கிடைக்காது!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - சிலிண்டர் மானியம் கிடைக்காது!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - சிலிண்டர் மானியம் கிடைக்காது!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – சிலிண்டர் மானியம் கிடைக்காது!

மத்திய நிதியமைச்சர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் மானியத்தொகை பெறுவதற்கு சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.

சிலிண்டர்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டத்தை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதுடன் அரசு சார்பாக மாதந்தோறும் மானியத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் சிலிண்டர் பெறும்போது முழுத்தொகையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன்பிறகு மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக அரசுக்கு வரி வருவாய் குறைந்து செலவினம் அதிகரிக்க தொடங்கியது. அதன் காரணமாக மானிய உதவித்தொகை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சிறிது காலத்திற்கு பிறகு மானியம் வழங்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலானோருக்கு மானியம் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.200 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – போராட்ட எதிரொலி! அரசு அதிரடி!

அதன்படி தற்போது இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் மானியம் பெற சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பாக மானியத்தொகை பெற விரும்பும் நபர்கள் ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்கு ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை 18000-2333-555 என்ற எண்ணிற்கு CALL அல்லது SMS மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் ஆதார் கார்டை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். மேலும் மானியத்தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் சிலிண்டர் கணக்கை இணைத்திருந்தால் தான் மானியத்தொகை வந்து சேரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!