TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் - தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் – தேர்வர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4, மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் தற்போது பாடத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி காணலாம்.

பாடத்திட்ட மாற்றங்கள்:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் குரூப் 4, மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அட்டவணையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கு 5255 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது முதல் பகுதியில் தமிழ் மொழி பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!

இவ்வாறு 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த பகுதியான பொது அறிவு வினாத்தாள் மதிப்பிடப்படும். இதன் மூலமாக தமிழ் மக்களுக்கு அதிக பணியிடங்களை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வெளிமாநிலத்தவர்கள் பணியிடங்களில் சேருவதற்கான வாய்ப்பு குறைகிறது. அத்துடன் தற்போது குரூப் 4 தேர்வில் ஆங்கில மொழிப்பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ் மொழிப் பாடப் பிரிவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்று தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுவரை தமிழ் மொழிப் பாடப் பிரிவில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்பட்டு வந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் – கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!

தற்போது தமிழ் மொழித்தாள் தகுதித் தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், தமிழ் மொழிப் பிரிவு பாடத்திட்டத்தில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்தவித அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவிப்பை வெளியிடவில்லை. அதனால் பழைய பாட திட்டம் தொடர வாய்ப்பு உள்ளது.பொது அறிவு பகுதிகளில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் கேட்கப்படும். கீழ்க்கண்ட தலைப்புகளில் இருந்து பொது அறிவு வினாக்கள் கேட்கப்படுகின்றன.

  • அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
  • நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.
  • புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவ காற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.
  • வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.
  • இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.
  • பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் வணிக வளர்ச்சி.
  • இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.
  • திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு மற்றும் கணிதத்தை கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத் தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!