தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் - சபாநாயகர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் - சபாநாயகர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 5ம் தேதியன்று அனைத்து கட்சியின் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தகவல் அளித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியை கைப்பற்றிய பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜூன் மாதம் துவங்கி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதியன்று துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற பேரவையின் போது பல்வேறு புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜன.5ம் தேதியன்று 2வது கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் – கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!

இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘தமிழகத்தில் ஜன.5ம் தேதி காலை 10 மணியளவில் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும். இதுவரை கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலக வளாகத்தில் சட்டபேரவை கூட்டத்தொடர் நடத்தப்படும். இம்முறையும் காகிதம் இல்லாத தொடுதிரை வசதி சட்டப்பேரவையில் கடைபிடிக்கப்படும்.

அந்த வகையில் ஆளுநர் உரையுடன் துவங்கும் கூட்டத்தொடரில் பொது பட்ஜெட் தாக்கல், மானியக் கோரிக்கை ஆகியவை நடைபெறும்’ என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 83% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 50%க்கும் மேற்பட்டோர் 2வது டோஸ் தடுப்பூசியை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருக்கும் கூட்டத் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

அதே நேரத்தில் சட்டசபைக்கு வரும் ஒவ்வொருவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இந்த முறை தொடுதிரை வசதியுடன் கூடிய கணினி மூலம் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் சபாநாயர்கள் கொடுக்கும் தீர்மானங்கள் கால தாமதமாகாமல் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆளுநரிடம் வலியுறுத்தும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!