‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் – கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் - கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் - கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறைக்கு செல்லும் கதிர் – கோவத்தின் உச்சத்தில் மூர்த்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முழுவதும் நிறைய ஆக்ஷனுடன் சீரியல் முழுவதும் செம மாஸ் காட்சிகளாக இருந்தது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியின் தொடர்கள் அனைத்தும் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா தொடர்கள் மூன்றும் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இதில், முதல் இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் மூன்று சீரியல்களும் அவ்வப்போது அதிரடி திருப்பங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடந்த வாரம் அதிக சண்டை காட்சிகள் திரைப்பட அளவிற்கு இருந்தது. ஜனார்த்தனன் கடையில் பணத்தை திருடிய பையனை கதிர் அடித்து விட, அவன் அடியாட்களோடு வந்து கண்ணனை அடித்து விடுகிறான்.

விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

இதனால் கண்ணனுக்கு பலத்த காயங்கள் ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்த கதிர், கண்ணனை அடித்த ரவுடிகளை நேரில் சென்று அடித்து காலிசெய்கிறார். இந்த சண்டை எதுவும் வேண்டாம் என்று மூர்த்தி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கதிர் சண்டையில் ஈடுபடுவார். இதனால் மூர்த்தி கதிர் மீது கடும் கோவத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், தனம் வேறு மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கண்ணனை இனி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று அழைத்து வருகிறார். இதனால் மூர்த்தி சற்று அதிர்ச்சி அடைவது போல் காட்சிகள் வர உள்ளது.

டிச.23ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு விளக்கம்!

மேலும் கதிர் அடித்த ரவுடிகள் அனைவரும் உயிருக்கு மிகவும் ஆபத்தான முறையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் கதிரை கைது செய்ய வேண்டுமே என்று போலீஸ் மூர்த்தி வீட்டிற்கு வருகின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மூர்த்தி இது அனைத்திற்கும் கண்ணன் தான் காரணம் என்று மேலும் கோவம் அடைகிறார். முல்லையும் கண்ணன் மீது எரிச்சல் ஆகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் சண்டை வெடிக்கும் என்றும், இதனால் குடும்பம் பிரிந்து விடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here