Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.583 & ரூ.553க்கான ப்ரீபெய்ட் திட்டம்! முழு விவரம் இதோ!

0
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.583 & ரூ.553க்கான ப்ரீபெய்ட் திட்டம்! முழு விவரம் இதோ!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.583 & ரூ.553க்கான ப்ரீபெய்ட் திட்டம்! முழு விவரம் இதோ!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.583 & ரூ.553க்கான ப்ரீபெய்ட் திட்டம்! முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தற்போது ரூ.583 மற்றும் ரூ.553 விலையில் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.

ப்ரீபெய்ட் திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில், கூடுதல் சலுகைகளுடன் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் சில ப்ரீபெய்ட் பேக்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலை வரம்பில் உள்ளன. இது சிறந்த ப்ரீபெய்ட் திட்டமாக இருக்குமா என பயனர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுகிறது. அந்த வகையில் ஜியோவின் ரூ. 583 மற்றும் ரூ. 553 ப்ரீபெய்ட் திட்டங்களிலும் இதே போன்ற சிக்கல்கள் காணப்படுகிறது. இதில் எந்த ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் சிறந்த பலன்களை வழங்குகிறது என்பதை விரிவாக காணலாம்.

Exams Daily Mobile App Download

முதலாவதாக ரூ.583க்கான ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது பயனர்கள் இதில் 84 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இது தவிர அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளும் கிடைக்கிறது. இதனுடன் பயனர்கள் JioTV மற்றும் JioCinema போன்ற பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் பெறுகின்றனர். மேலும், ஜியோ மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ.149 ஆகும்.

AXIS வங்கியில் 40 காலிப்பணியிடங்கள் – Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மறுபுறம், ரூ.533 ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் கிட்டத்தட்ட இதே போன்ற பலன்களை வழங்குகிறது. இதில் சில வித்தியாசம் உண்டு. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தினசரி 2ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இதுவும் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலும் Jio பயனர்கள் JioTV மற்றும் JioCinema பயன்பாடுகளை அணுக முடியும். இப்போது ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம் சில OTT நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதில் டேட்டா செலவுகள் அதிகமாக இருக்கும்.

இத்திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ரூ.533க்கான ப்ரீபெய்ட் ஜியோ திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இவை இரண்டும் ஒரே செல்லுபடியாகும் காலத்துடன் வருகின்றன. இப்போது நீங்கள் குறைவான விலையில் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால், ரூ.533 ஜியோ ப்ரீபெய்ட் பேக்கை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை அனுபவிக்க விரும்பினால், ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கலாம். இதில் தினசரி 1.5 ஜிபி மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!