Jio, Airtel & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.500க்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ப்ரீபெய்ட் திட்டங்கள்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் இந்நிறுவனங்களில் ரூ. 500க்கு கீழ் உள்ள சில ரீசார்ஜ் திட்டங்கள் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, இந்த திட்டங்கள் 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அந்த வகையில் ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இதன் கீழ் ஒருவர் தினசரி 1.5ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
Exams Daily Mobile App Download
அதாவது பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் மொத்தம் 84ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். தொடர்ந்து ஜியோவின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த பேக்கில் JioTV ஆப்ஸ் மற்றும் JioCinema செயலிக்கான இலவச அணுகலும் அடங்கும். தொடர்ந்து ஏர்டெல்லும் இதேபோன்ற திட்டத்தை வழங்குகிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோவை விட அதிக நன்மைகள் இதில் கிடைக்கும். அந்த வகையில் ரூ.479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் இதில் வழங்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்களின் விலை அதிரடி உயர்வு – மக்கள் கடும் அவதி!
இதனுடன் அப்பல்லோவுக்கு மூன்று மாதங்கள் இலவச அணுகலையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இது தவிர மற்ற பலன்களில் Wynk Music ஆப்ஸ் மற்றும் HelloTunesக்கான இலவச அணுகல் இத்திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இறுதியாக வோடபோனின் ரீசார்ஜ் திட்டம் சற்று வித்தியாசமான நன்மைகளுடன் ரூ.479 ப்ரீபெய்ட் பேக்கை கொண்டுள்ளது. இத்திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இதனுடன் 12:00AM முதல் 6:00AM வரை வரம்புகள் இல்லாமல் இலவச இரவு டேட்டாவையும் இதில் பெறலாம்.