மாநிலத்தில் டிகிரி முடித்த பட்டதாரிகள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

0
மாநிலத்தில் டிகிரி முடித்த பட்டதாரிகள் கவனத்திற்கு - வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!
மாநிலத்தில் டிகிரி முடித்த பட்டதாரிகள் கவனத்திற்கு - வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!
மாநிலத்தில் டிகிரி முடித்த பட்டதாரிகள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரு நகரில் மே 8 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனால் அங்கு இருக்கும் பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் நாட்டில் பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இது தவிர அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப் பட்டு நேரடி வகுப்புகள் துவங்கப் பட்டது. மேலும் இந்த பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளது. மேலும் நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்னர் தற்போது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசின் சார்பில் வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரு நகரில் நாளை மறுநாள் (மே 8) அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் மேஜிக் பஸ் பவுண்டேஷன், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவற்றின் மூலம் பெங்களூரு, பாபுஜி நகர், மாநகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள தொழிலாளர் சமுதாயக்கூடத்தில் மே 8ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.35000..!

மேலும் இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள், சுயகுறிப்பு 6 பிரதிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 6, அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கான கல்வி தகுதிகள் மற்றும் வயது வரம்பு, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டம் படித்தவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பங்குபெற்று பயன்பெறலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here