அரசு ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

0
அரசு ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
அரசு ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
அரசு ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

கோவா மாநில அரசுத்துறையில் பணிபுரிந்து தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஓய்வூதியம் அறிவிப்பு

ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த ஓய்வூதியம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒவ்வொரு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகிறது. சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தில் (OPS) சில மாற்றங்களை எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்க நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது கோவா மாநில அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60க்கு பதிலாக 58 என அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது, 58 வயதில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில், மாநில அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கத் தேவையில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முடிவை எதிர்த்து அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் பி.வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு 60 வயது முதல் திருத்தப்பட்ட விகிதத்தில் ஓய்வூதியமும், இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையையும் அடுத்த நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு கோவா மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் இது போன்ற சிக்கல்களை சந்தித்து வரும் மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here