திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பவித்ரோற்சவம் 8ம் தேதி முதல் தொடக்கம்!

0
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - பவித்ரோற்சவம் 8ம் தேதி முதல் தொடக்கம்!
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பவித்ரோற்சவம் 8ம் தேதி முதல் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், மற்றும் வருடாந்திர பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்ரோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதாவது பவித்ரோற்சவ உற்வச விழா இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி துவங்கி 10 தேதி வரை நடைபெற உள்ளது. திருமலையில் 15-16-ம் நூற்றாண்டுகளில் பவித்ரோற்சவம் நடந்ததற்கான சான்றுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்திர பவித்ரோற்சவம்:

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ்பெற்ற கோவில் ஆகும். இங்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 1463-ம் ஆண்டு சாளுவ மல்லைய்யா தேவராஜா எனும் அரசர் பவித்ரோற்சவ வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தார். இந்த வகையில் இந்த வருடம் வரும் 8-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதாவது கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download

பவித்ரோற்சவ நாளில் உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி, நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருகிறது, அதாவது மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.

WhatsAppல் மொபைல் எண்ணை மறைக்கும் வசதி? விரைவில் புதிய அப்டேட்

மேலும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம். பவித்ரோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வரவும், மேலும் ஏதேனும் ஒரு அசல் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை இணையதளத்தை பார்க்கலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!