WhatsAppல் மொபைல் எண்ணை மறைக்கும் வசதி? விரைவில் புதிய அப்டேட்!

0
WhatsAppல் மொபைல் எண்ணை மறைக்கும் வசதி? விரைவில் புதிய அப்டேட்!
WhatsAppல் மொபைல் எண்ணை மறைக்கும் வசதி? விரைவில் புதிய அப்டேட்!
WhatsAppல் மொபைல் எண்ணை மறைக்கும் வசதி? விரைவில் புதிய அப்டேட்!

WhatsApp நிறுவனம் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கூடிய விரைவில் உங்களது மொபைல் எண்ணை மறைக்கும்படியான புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்க இருக்கிறது.

Whatsapp:

Beta நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்ஆப் செயலியை மட்டுமே கிட்டத்தட்ட பல மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. அதாவது, வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறினால் வெளியேறிய நபரை அந்த குரூப் அடையாளம் காட்டாது. அதே நேரத்தில் வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிரும் தகவல்களை அட்மின் டெலிட் செய்துகொள்ளும் அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் வழங்கிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதோடு மட்டுமல்லாமல் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் இன்ஸ்டாகிராம் செயலியை போல அவதார் அப்டேட்களை கூடிய விரைவில் வழங்க இருக்கிறது. மேலும், ஆரம்பத்தில் Delete For everyone செய்யும் வசதி 8 நிமிடங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வாட்ஸ்ஆப் நிறுவனம் அந்த 8 நிமிட கால அவகாசத்தை நீட்டித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரைக்கும் Delete For everyone செய்துகொள்ளும்படியான அப்டேட்டை வழங்கியிருக்கிறது.

PM Kisan திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

மேலும், வாய்ஸ் மெசேஜ்ஜிலும் சில அப்டேட்களை வழங்கி இருக்கிறது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் கேட்டு கொண்டிருக்கும் போதே வேறு ஒருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி கொள்ளலாம். மேலும், உங்களது வாய்ஸ் மெசேஜ்ஜை ஸ்டேட்டஸ்சாக கூட வைத்துக்கொள்ளும் வசதி கூடிய விரைவில் வர இருக்கிறது. அதே போல உங்களது வாட்ஸ்ஆப்பில் மொபைல் எண்ணை மறைக்கும்படியான வசதியையும் கூடிய விரைவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!