TNPSC குரூப் தேர்வுகள் எழுதுவோர் கவனத்திற்கு – எச்சரிக்கை தகவல் வெளியிட்ட ஏடிஎஸ்பி!

0
TNPSC குரூப் தேர்வுகள் எழுதுவோர் கவனத்திற்கு - எச்சரிக்கை தகவல் வெளியிட்ட ஏடிஎஸ்பி!
TNPSC குரூப் தேர்வுகள் எழுதுவோர் கவனத்திற்கு - எச்சரிக்கை தகவல் வெளியிட்ட ஏடிஎஸ்பி!
TNPSC குரூப் தேர்வுகள் எழுதுவோர் கவனத்திற்கு – எச்சரிக்கை தகவல் வெளியிட்ட ஏடிஎஸ்பி!

TNPSC Group 2 தேர்வுக்கான தேதிகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த தேர்வுக்கான முறைகள் குறித்த முக்கிய தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தெரிவித்து உள்ளார்.

TNPSC Group 2:

தமிழ்நாட்டில் நிலவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ள காரணத்தால் சமீபத்தில் TNPSC குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்று கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது குரூப் 4 க்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான முக்கிய பதிவு இதோ..!

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் கலந்து கொண்டு அரசு போட்டித் தேர்வுக்கான புத்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து அதில் உள்ள புத்தகங்களை பார்வை இட்டார்.

திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வசதி!

அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய ஏடி எஸ் பி தேவநாதன், tnpsc குறித்த தகவலையும் தெரிவித்து உள்ளார். வாழ்க்கையில் நாம் என்னவாக ஆக போகிறோமோ, அதனை குறித்த முழு விவரங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். காவலர் பணி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்ற எண்ணம் ஒரு போதும் மாணவர்கள் மத்தியில் எழ கூடாது எனவும் தற்போதைய கால கட்டத்தில் தமிழக அரசு அனைத்தையும் கண்காணிப்பதாகவும், லஞ்சம் கொடுத்து அரசு பணியை வழங்க இயலாது என தெரிவித்தார்.மேலும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதற்கான பயிற்சியையும் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் ஏடிஎஸ்பி தெரிவித்து உள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!