ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் ATM கட்டணம்!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 1 முதல் ATM கட்டணம்!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 1 முதல் ATM கட்டணம்!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் ATM கட்டணம்!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மேல் பணப் பரிவர்த்தனைகள், ஏடிஎம்மில் பணம் எடுத்தல், செக்புக் கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கி அறிவிப்பு:

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மேல் புதிய மாற்றங்கள் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெகுலர் சேமிப்பு / சம்பள கணக்கு, பண பரிவர்த்தனை கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாதம் 4 முறை ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!

மேலும் உங்களது வங்கி கணக்கு திறக்கப்பட்ட கிளையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கு திறக்காத மற்ற கிளைகளில் (Non Home Branch) தினம் 25,000 ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும்.

மேலும் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைகள் மூலமாக தினமும் 25,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ரூபாய் 150 வரை வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் எடுக்க அனுமதியில்லை. சீனியர் சிட்டிசன்கள், யங் ஸ்டார், ஸ்மார்ட் ஸ்டார் கணக்குகளுக்கு தினம் 25,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. சில்வர் சேவிங்ஸ்/சம்பள கணக்கிற்கும் இதே கட்டண முறை தான். கோல்டு பிரிவிலிஜ் சேவிங்ஸ்/ சம்பள கணக்கிற்கு மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

வெள்ளி, தங்கம், மேக்னம், டைட்டானியம் மற்றும் wealth வகைகளில் ஒரு மாதத்தில் 6 மெட்ரோ இடங்களில் (மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்) முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும். ஒரு மாதத்தில் மற்ற எல்லா இடங்களிலும் முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும். அதன்பிறகு, நிதி பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் ஒரு வருடத்திற்கு 25 செக் லீப்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட மாட்டாது. அதற்கு மேல் ஒவ்வொரு 10 செக் லீப்களுக்கும் ரூ.20 கட்டணம் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் உள்ள விகிதங்களில் மேல் பட்டியலிடப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!