கலை & அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் மாற்றம் – கல்லூரி கல்வித்துறை அறிக்கை!

0
கலை & அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் மாற்றம் - கல்லூரி கல்வித்துறை அறிக்கை!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் பதிவுக்கான விண்ணப்ப சாளரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த கல்லூரி கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு கல்லூரிகளுக்கான தனித்தனியான விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதற்கு பதிலாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பயில்வதற்கு ஒரே விண்ணப்ப முறையான சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் ( Single Window System) கீழ் வரும் கல்வியாண்டு முதல் விண்ணப்பங்கள் பெற உள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.  இது குறித்தான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி விடுமுறை ரத்து – மாநில அரசு அதிரடி!

அதில் கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவி பெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் அமைப்பதற்கு தேவையான ஆய்வை மேற்கொண்டு அது குறித்தான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் விண்ணப்ப செயல்முறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!